18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை?.. ஆலோசனை மேற்கொள்ளும் இந்திய அரசு!
India Mulls Social Media Ban for Under 18 | இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் , 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் இளைய தலைமுறையினர் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களை (Social Media) பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க இந்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உலக நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது இந்தியாவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அரசு தடை விதிக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?
குழந்தைகள் உரிமைக்கான தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கு இன்று (செப்டமர் 29, 2026) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இதையும் படிங்க : ஜியோமி 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!
சமூக ஊடகங்களில் ஏற்படும் சிக்கல்கள்
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதன் மூலம் மோசடி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவற்றுக்கு உள்ளாகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பழகி சிறுவர்கள் மற்றும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நிகழ்வுகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் உலவியல் ரீதியான சிக்கல்களையும் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், இந்திய அரசு இந்திய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்.. முழு விவரம்!
டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்த நாடுகள்
இந்தியா தற்போது இந்த முயற்சியை கையில் எடுத்துள்ள நிலையில், உலக நாடுகள் சில இதனை ஏற்கனவே அமலில் வைத்துள்ளன. ஆஸ்திரேலியா அரசாங்கம் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. மலேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.