AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜியோமி 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!

Xiaomi 18 Pro and Pro Max Launched | ஜியோமி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஜியோமி 18 ப்ரோ மற்றும் ஜியோமி 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஜியோமி 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!
ஜியோமி 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Sep 2026 15:58 PM IST

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) அறிமுகம் செய்வதில் மிக சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஜியோமி (Xiaomi) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தனது ஜியோமி 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 18 Pro and Xiaomi 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜியோமி 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் அறிமுகம்

தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் ஜியோமி நிறுவனம், தற்போது தனது ஜியோமி 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சீரீஸ் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளன. இவை மேலும் பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளன.

இதையும் படிங்க : லாவா விராட் கர்வ் 5ஜி.. அறிமுக விலை ரூ.19,999 மட்டும்தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஜியோமி 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஜியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் Full HD + AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவே ஜியோமி 18 ப்ரோ மேஸ் ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் Full HD + AMOLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. ஜியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், ஜியோமி 18 ப்ரோ மேக்ஸ் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது லாவா போல்டு என்4 ப்ரோ!

இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us