AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்.. முழு விவரம்!

Oppo Find X10 Pro Max Launched In China | ஓப்போ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்.. முழு விவரம்!
ஓப்போ ஃப்ணட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Sep 2026 19:06 PM IST

இந்தியாவில் பட்ஜெட் விலையில் (Budget Range Smartphones) அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிறுவனமாக ஓப்போ (Oppo) உள்ளது. இந்த நிறுவனம் அடுத்தடுத்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது தனது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை (Oppo Find X10 Pro Max Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்

ஓப்போ நிறுவனம் தனது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ ஃபைண்ட் சீரீஸில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ப்ரோ மேக்ஸ் மாடல் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போன் 200 மெகாபிக்சல் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 9600 ப்ரோ சிப்செட் அம்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது லாவா போல்டு என்4 ப்ரோ!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இச்ன் LTPO OLDE டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது செல்ஃபி புகைப்படங்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 8,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : மனைவிக்கு ஐபோன் 18 ப்ரோ வாங்க தங்க நகையை விற்பனை செய்த கணவன்!

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலைக்கு ரூ.97,050-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ.1,07,048-க்கு அறிமுகமாகியுள்ளது.

Follow Us