ரீசார்ஜ் செய்தால் ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு.. ரூ.10,000 சைபர் மோசடி பாதுகாப்பு – பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்
BSNL Free Insurance Offer : பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவச காப்பீட்டு வசதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் படி குறிப்பிட்ட 2 திட்டங்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான விபத்து காப்பீடும், ரூ.10,000 வரையிலான சைபர் மோசடி பாதுகாப்பும் கிடைக்கும் என அறிவித்துள்ளது
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவச காப்பீட்டு வசதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் படி குறிப்பிட்ட 2 திட்டங்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான விபத்து காப்பீடும், ரூ.10,000 வரையிலான சைபர் மோசடி பாதுகாப்பும் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் தனியாக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீசார்ஜ் செய்தால் ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்களான ரூ.202 மற்றும் ரூ. 2449 ஆகிய 2 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே தற்போது இந்தக் காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இந்த 2 திட்டங்களிலும் விபத்து காப்பீடு மற்றும் சைபர் மோசடி காப்பீடு என 2 ஆஃபர்களும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : WhatsaApp-ல் இருந்து தானாகவே கேலரிக்கு வரும் புகைப்படங்கள்.. தடுப்பது எப்படி?




அதன் படி குறைந்த செலவில் ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கான உருவாக்கப்பட்டுள்ள ரூ.202 ரீசார்ஜ் திட்டத்தில் 300 நிமிடங்கள் வாய்ஸ் கால், 5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றுடன் காப்பீட்டுப் பலன்களும் இணைந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போ ரூ.2449 ரீசார்ஜ் திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் அன்லிமிட்டெர் வாய்ஸ் கால் வசதி, தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் வாடிக்கையாலர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் ஓராண்டுக்கு வாய்ஸ் கால், டேட்டா மற்றும் காப்பீடு என 3 தேவைகளும் பூர்த்தியாகும். இந்தக் காப்பீட்டுத் திட்டங்களுக்காக பொதுத்துறை நிறுவனமான தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் கைகோர்த்துள்ளது. ரீசார்ஜ் கட்டணத்திலேயே காப்பீடு அடங்கியிருப்பதால், வாடிக்கையாளர்கள் தனியாக பிரீமியம் செலுத்தவோ, தனி பாலிசி வாங்கவோ வேண்டியதில்லை.
காப்பீடு எப்போது செயல்பாட்டுக்கு வரும்?
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிறுவன தினமான அக்டோபர் 1, 2026 இந்தக் காப்பீட்டுடன் கூடிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தகுதியான திட்டத்தில் ரீசார்ஜ் செய்தவுடன் பாலிசி தானாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். பாலிசி தொடர்பான விவரங்கள் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். கிடைத்துள்ள தகவல்களின்படி, ரீசார்ஜ் செய்த நேரத்திலிருந்து 24 மணி நேரம் கழித்தே காப்பீடு நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
விபத்து காப்பீட்டில் விபத்தின் போது வாடிக்கையாளருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அதேபோல், ஆன்லைன் மோசடி, போலி இணைப்புகள் மூலம் பண இழப்பு போன்ற சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு, ரூ.10,000 வரை இழப்பீடு கிடைக்கும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள சூழலில், இந்த சைபர் பாதுகாப்பு சாதாரண பயனாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : யூடியூபில் ஷாப்பிங் செய்ய ஏஐ கருவி.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த யூடியூப்.. முழு விவரம்!
இந்தக் காப்பீடு முழுமையாக ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது. எனவே, காப்பீட்டு கோரிக்கை செய்வதற்கான தகுதி, தேவையான ஆவணங்கள் போன்ற விவரங்களை, ரீசார்ஜ் செய்த பின் வரும் எஸ்எம்எஸ் மற்றும் பாலிசி ஆவணங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்வது நல்லது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான போட்டி கடுமையாகி வரும் நிலையில், கட்டண சலுகைகளைத் தாண்டி காப்பீடு போன்ற கூடுதல் பலன்களை வழங்கி வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் முயற்சியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.