அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
Amazon Great Indian Festival Sale 2026 | அமேசான் நிறுவனம் அவ்வப்போது தனது சேலை அறிவித்து, சிறப்பு தள்ளுபடிகளுடன் நடத்து. அந்த வகையில், தற்போது தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விற்பனைகளை நடத்தும். அந்த வகையில், அமேசா நிறுவனத்தின் கிரேட் இந்தியல் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) அக்டோபர் 08, 2026 அன்று தொடங்க உள்ளது. இந்த சேலில் மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்
அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் சேலை அக்டோபர் 08, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த சேலில் ஐபோன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஐபோன்களுக்கு எவ்வளவு சலுகை வழங்க உள்ளது என குறிப்பிடவில்லை. அதுமட்டுமன்றி, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 7, விவோ வி300 எப்ஃஇ, ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் நோர்டு 6 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிம் கார்டை வேறு ஒருவருக்கு கொடுத்தால் ரூ.50 லட்சம் அபராதம்.. 3 ஆண்டுகள் சிறை!
அமேசான் வெளியிட்டுள்ள சலுகை விவரங்கள்
- ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.18,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கி சலுகைகளும் அடங்கும்.
- ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.23,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
- iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கி சலுகைகளும் அடங்கும்.
- இதேபோல iQOO Neo 10 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள் உடன் ரூ.41,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
- ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப் ரூ.71,990-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
- ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ரூ.9,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 6 இலக்க பாஸ்வேர்டு போதுமானதாக இருக்காது.. பாதுகாப்பை Double Strong ஆக மாற்றிய வாட்ஸ்அப்!
இன்னும் தனது சலுகைகள் குறித்த முழு தகவல்களையும் அமேசான் வெளியிடாமல் உள்ளது. சலுகை தேதி நெருங்கும் பட்சத்தில் எந்த எந்த பொருட்களுக்கு எவ்வளவு சலுகை, சிறப்பு சலுகைகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக தகவல்களை அந்த நிறுவனம் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


