AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

6 இலக்க பாஸ்வேர்டு போதுமானதாக இருக்காது.. பாதுகாப்பை Double Strong ஆக மாற்றிய வாட்ஸ்அப்!

Meta's New Passkey and PIN Updates For WhatsApp | வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் வகையில் புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், புதிய பாஸ்கீ மற்றும் பின் அப்டேட் ஆகிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6 இலக்க பாஸ்வேர்டு போதுமானதாக இருக்காது.. பாதுகாப்பை Double Strong ஆக மாற்றிய வாட்ஸ்அப்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Sep 2026 00:06 AM IST

வாட்ஸ்அப்பில் (WhatsApp) பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மெட்டா (Meta) பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு அம்சம் மேலும் ஒருமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமன்றி, பயனர்கள் இன் கம்மிங் கால்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துக்கொள்ளவும், ஸ்கேம் கால்கள் குறித்து எளிதாக தெரிந்துக்கொள்ளும் வகையிலும் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மேம்பாடு குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாஸ்கீ அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனம் 2025-ல் வாட்ஸ்அப்பில் பாஸ்கீ அம்சத்தை அறுமுகம் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் பாஸ்வேர்டுக்கு பதிலாக Fingerprint மூலம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் சாட் பேக்அப் மற்றும் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது முதலே பில்லியன் கணக்கான பயனர்கள் இந்த பாஸ்கீ அம்சத்தை செட் செய்துள்ளதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது.

இதையும் படிங்க : AI மூலம் முடி வெட்டும் தொழிலுக்கும் ஆபத்து?.. இணையத்தில் வைரலாகும் வீடியொ!

6 இலக்க பாஸ்வேர்டு போதுமானதாக இருக்காது

முன்னதாக வெறும் ஒரு பாஸ்கீ மட்டுமே இருந்த நிலையில், இரண்டு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களுக்கு அது சற்று கடினமானதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான், இரண்டு சாதனங்களுக்கு வெவ்வேறு பாஸ்கீக்களை செட் செய்துக்கொள்ளும் அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பல சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : ஐபோன் 18 சீரீஸ் விற்பனை தொடக்கம்.. ஆப்பிள் ஸ்டோர்களில் குவியும் வாடிக்கையாளர்கள்!

முன்பை விட நீளமான பின்னை செட் செய்துக்கொள்ளலாம்

வாட்ஸ்அப்பில் இதுவரை Two Step Verification முறையில் 6 இலக்க பாஸ்வேர்டுகளை மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்தது. இந்த நிலையில் தான், அது தொடர்பான முக்கிய அறிவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. அதாவது, இதுவரை 6 இலக்கமாக இருந்த பாஸ்வ்ரேடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் நீளமான எண்கள் மற்றும் எழுத்துக்களை வாடிக்கையாளர்கள் பின் ஆக பயன்படுத்தலாம். இந்த பின்னை யூகிப்பதை கடினமாக்கும் வகையில், இதில் சிறப்பு எழுத்துக்களை பயன்படுத்தும் அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

Follow Us