யூடியூபில் ஷாப்பிங் செய்ய ஏஐ கருவி.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த யூடியூப்.. முழு விவரம்!
YouTube AI Shopping Tool | யூடியூப் இதுவரை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே உள்ளது. ஆனால், 2024 ஆம் ஆண்டு முதல் ஷாப்பிங் செய்ய சிறந்த தளமாக மாறி வருகிறது. இந்த நிலையில், யூடியூப் தளத்தில் ஏஐ ஷாப்பிங் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யூடியூப் (YouTube) இதுவரை பொழுதுபோக்கு செயலியாக இருந்து வந்த நிலையில், அதில் ஷாப்பிங் செய்வதற்கான சிறப்பு அம்சங்களை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு யூடியூப் ஷாப்பிங் (YouTube Shopping) அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் இந்த அம்சத்தை விரிவுப்படுத்தும் வகையில் ஏஐ ஷாப்பிங் கருவியைஇண்ட் (AI Shopping Tool) தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏஐ கருவியை அறிமுகம் செய்த யூடியூப்
இந்திய கிரியேட்டர்களுக்காக 2024, அக்டோபர் மாதத்தில் ஷாப்பிம் அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தான், அந்த அம்சத்தை செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்துடன் விரிவுப்படுத்த ஏஐ திட்டமிட்டுள்ளது. இந்த ஷாப்பிங் அம்சத்தில் தனது புதிய பங்குதாரர்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பிளிப்கார்ட், மிந்த்ரா, நகைக்கா, பர்ப்பிள், ஷாப்சி ஆகிய நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ள நிலையில், தற்போது அமேசான், ஏஜியோ, மீஷோ, ஸ்னாப்டீல் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!