WhatsaApp-ல் இருந்து தானாகவே கேலரிக்கு வரும் புகைப்படங்கள்.. தடுப்பது எப்படி?
Stop WhatsApp Auto-Download | வாட்ஸ்அப் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்களுக்கு இருக்கும் சிக்கல் குழுக்களில் இருந்து ஏராளமான புகைப்படங்கள் கேலரியை ஆக்கிரமிப்பதுதான். இந்த நிலையில், புகைப்படங்களை கேலரியை ஆக்கிரமிப்பதை தடுக்க வாட்ஸ்அப்பில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மிக முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் வாட்ஸ்அப் சிறந்ததாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்கள் தானாகவே போட்டோ கேலரியில் பதிவிறக்கம் செய்யப்படுவதை தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேலரியில் தானாகவே சேகரிக்கப்படும் வாட்ஸ்அப் புகைப்படங்கள்
வாட்ஸ்அப்பில் தனிநபர் உரையாடல்கள் மட்டுமன்றி, ஏராளமான குழுக்களும் இருக்கும். இந்த குழுக்களில் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படும். அவை அனைத்தும் தானாகவே கேலரியில் ஆட்டோ டவுன்லோட் (Auto Download) செய்யப்படுவதன் மூலம், மிக விரைவில் கேலரியின் ஸ்டோரேஜ் தீர்ந்துவிடும். அதுமட்டுமன்றி, தேவையற்ற ஃபைல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதால் குழப்பமும் ஏற்படும். இந்த சிக்கலை தவிர்க்க ஒரு தீர்வு உள்ளது. அதாவது, இவ்வாறு புகைப்படங்கள், வீடியோக்கள் தானாக பதிவிரக்கம் செய்யப்படுவதை ஒரே ஒரு செட்டிங்க்ஸ் மூலம் தடுக்க முடியும்.
இதையும் படிங்க : பட்டன் போன் பயனர்களுக்கு பெரிய Relief.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு Strict Rules போட்ட TRAI!
ஆட்டோ டவுன்லோடு அம்சத்தை கேன்சல் செய்வது எப்படி?
- அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு செல்ல வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் உள்ள Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.
- பிறகு அதில் உள்ள Storage and Data என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் Auto Download ஆப்ஷனை கிளிக் செய்து Wi-Fi, Mobile Data அல்லது எப்போதுமே Never என்ற மூன்று ஆப்ஷன்களில் உங்களுக்கு சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.
- இதில் Never என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் கேலரியில் தேவையற்ற புகைப்படங்கள் தேங்காது.
இதையும் படிங்க : சிம் கார்டை வேறு ஒருவருக்கு கொடுத்தால் ரூ.50 லட்சம் அபராதம்.. 3 ஆண்டுகள் சிறை!
மேலே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றி மிக சுலபமாக வாட்ஸ்அப்பில் Auto Download அம்சத்தை நீங்கள் கேன்சல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.