பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. நத்திங் 4a, 4a Pro மற்றும் 4b ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
Flipkart Big Billion Days 2026 | பிளிப்கார்ட் நிறுவனம் தனது 2026 ஆம் ஆண்டுக்கான பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் நத்திங் 4ஏ, நத்திங் 4ஏ ப்ரோ மற்றும் நத்திங் 4பி ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை (Flipkart Big Billion Days Sale ) அறிவித்துள்ளது. இந்த சேல் அக்டோபர் 09, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தான் சேல் தொடர்பான முக்கிய சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான், பிளிப்கார்ட் சேலில் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a), நத்தின் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) மற்றும் நத்திங் போன் 4பி (Nothing Phone 4B) ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்
பிளிப்கார்டின் இந்த பிக் பில்லியன் டேஸ் சிறப்பு சலுகைகளை சாதாரண பயனர்கள் அக்டோபர் 09, 2026 முதல் பெற்றுக்கொள்ளலாம். இதுவே விஐபி, பிளஸ் மற்றும் பிளாக் மெம்பர்கள் ஒரு நாள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 08, 2026 அன்று முதலே பெற்றுக்கொள்ளலாம். இந்த சேலில் நத்தின் போன் 4ஏ தனது மூன்று வேரியண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடியை பெறுகிறது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.3,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர கூப்பன், எக்ஸ்சேஞ் ஆகியவற்றை சேர்த்து ரூ.32,999-க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : இன்றுமுதல் வாட்ஸ்அப் பிசினஸ் கட்டண உயர்வு – புதிய மெசேஜிங் கட்டண முறை அமல்




இதேபோல அதிக வேரியண்ட் ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.40,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.45,999-க்கு விற்பனையாகும் நிலையில், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.46,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ரீசார்ஜ் செய்தால் ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு.. ரூ.10,000 சைபர் மோசடி பாதுகாப்பு – பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்
8ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.54,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.