AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்றுமுதல் வாட்ஸ்அப் பிசினஸ் கட்டண உயர்வு – புதிய மெசேஜிங் கட்டண முறை அமல்

WhatsApp Business Charges : மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கான புதிய விலை நிர்ணய முறையை அக்டோபர் 1, 2026 இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர் சேவை, ஆர்டர் தகவல், அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் நிறுவனங்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 

இன்றுமுதல் வாட்ஸ்அப் பிசினஸ் கட்டண உயர்வு – புதிய மெசேஜிங் கட்டண முறை அமல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Oct 2026 21:10 PM IST

இந்தியாவில் வாட்ஸ்அப் பிசினஸ் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கான புதிய விலை நிர்ணய முறையை அக்டோபர் 1, 2026 இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர் சேவை, ஆர்டர் தகவல், அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் நிறுவனங்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இன்றுமுதல் வாட்ஸ்அப் பிசினஸ் கட்டண உயர்வு

இந்த புதிய கட்டண முறை, வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்மை நேரடியாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு பொருந்தும். இந்த நிலையில், புதிய விதிமுறையின்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் வாட்ஸ்அப் பிசினஸ் எண்ணுக்கும் மாதந்தோறும் 1,000 சேவை மெசேஜ்கள் இலவசமாக வழங்கப்படும். அதாவது 1000 சர்வீஸ் மெசேஜ்களை இலவசமாக அனுப்பிக்கொள்ளலாம். இந்த இலவச வரம்பு முடிந்து அனுப்பப்பும் மெசேஜ்க்கும் 0.115 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : யூடியூபில் ஷாப்பிங் செய்ய ஏஐ கருவி.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த யூடியூப்.. முழு விவரம்!

மேலும் வாடிக்கையாளர் சேவை பணியாளர்கள் அனுப்பும் தகவல்கள் மட்டுமின்றி, ஏஐ பாட்ஸ் மூலம் உருவாக்கப்படும் பதில்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட பிறகு தொடங்கும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை காலத்திற்குள் இந்த வகையான தகவல் பரிமாற்றங்கள் நடைபெறலாம்.

ஆர்டர் தொடர்பான தகவல்கள், பொருள் அனுப்பப்பட்டதற்கான தகவல், டெலிவரி அப்டேட் உள்ளிட்ட பரிவர்த்தனை சார்ந்த தகவல்கள் பொதுவாக யூட்டிலிட்டி மெசேஜ்கள் எனப்படுகின்றன. மேலும் இந்தியாவில் இனி ஒவ்வொரு டெலிவரி செய்யப்பட்ட யூட்டிலிட்டி மெசேஜுக்கும் ரூ.0.115 கட்டணம் வசூலிக்கப்படும்.

குறிப்பாக, வாடிக்கையாளர் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட 24 மணி நேர சேவை காலத்திற்குள் அனுப்பப்பட்டாலும், குறிப்பிட்ட யூட்டிலிட்டி மெசேஜ்களுக்கு இந்தக் கட்டணம் பொருந்தும். வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அனுப்பப்படும் மெசேஜ்களுக்கும் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெலிவரி செய்யப்படும் ஒவ்வொரு அத்தகைய செய்திக்கும் ரூ.0.115 கட்டணம் வசூலிக்கப்படும்.

இதனிடையே, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மார்க்கெட்டிங் சார்ந்த மெசேஜ்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி அனுப்பப்படும் ஒவ்வொரு மார்க்கெட்டிஹ் மெசேஜ்களுக்கு ரூ.0.8631 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

இந்தக் கட்டண முறை உலகம் முழுவதும் அமலுக்கு வந்தாலும், நாட்டுக்கு நாடு கட்டண விகிதம் வேறுபடும். மேலும், அதிக எண்ணிக்கையில் மெசேஜ் அனுப்பும் நிறுவனங்களுக்கும் சர்வீஸ் மெசேஜ்களில் எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்று மெட்டா தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் ஓடிபி போன்ற மெசேஜ்களுக்கும் இதே ரூ.0.115 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதே நேரம் விளம்பரம் மற்றும் சலுகைகள் தொடர்பான மார்க்கெட்டிங் மெசேஜ்களுக்கு மிக அதிகமாக, ஒரு மெசேஜுக்கு ரூ.0.8631 வசூலிக்கப்படும் என்றும் மெட்டா அறிவிததுள்ளது. மேலும் மெட்டா வெளியிட்டுள்ள இந்தக் கட்டணங்கள் இறுதியானது இல்லை என்றும், பொருந்தக்கூடிய வரிகளும், கூடுதல் கட்டணங்களும் இதனுடன் சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us