AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.30,000 பட்ஜெட்டில் 5 சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?

Best Camera Phones : ஸ்மார்ட்போன் வாங்கும்போது பலரும் முதலில் எதிர்பார்ப்பது கேமராவை தான். குறிப்பாக குறைந்த விலையில் குவாலிட்டியான கேமரா போன்களை மக்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் 2026 செப்டம்பரில் ரூ.30,000க்குள் 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.30,000 பட்ஜெட்டில் 5 சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Oct 2026 16:44 PM IST

ஸ்மார்ட்போன் வாங்கும்போது பலரும் முதலில் கவனிப்பது கேமராவைத்தான். குறிப்பாக குறைந்த விலையில் குவாலிட்டியான கேமரா போன்களை மக்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் ரூ.30,000க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. முன்பு அதிக மெகாபிக்சல் கொண்ட கேமரா மட்டுமே இந்த விலையில் சிறப்பம்சமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், தனி டெலிஃபோட்டோ கேமரா, அல்ட்ரா வைட் லென்ஸ், அதிக ரெசல்யூஷன் கொண்ட செல்ஃபி கேமரா போன்ற பிரீமியம் அம்சங்களும் தற்போது கிடைக்கின்றன.

தினமும் செல்ஃபி எடுப்பவர்கள், போர்ட்ரெய்ட், ஜூம் அல்லது வீடியோ கிரியேட்டர்கள் என உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், அதற்கேற்ற போன்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. செப்டம்பர் 2026ல் இந்தியாவில் ரூ.30,000க்குள் கிடைக்கும் சிறந்த 5 கேமரா ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிக்க : iQOO 16 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்?.. முழு விவரம் இதோ!

1. விவோ V60e

கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போன்களில் விவோ V60e முன்னணியில் உள்ளது. இதன் பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 200 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது. அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும் உள்ளது. குறிப்பாக செல்ஃபி பிரியர்களுக்காக, ஆட்டோஃபோகஸ் வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏஐ அடிப்படையிலான போர்ட்ரெய்ட் அம்சங்களும் உள்ளன.

மேலும் 90W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,500mAh பேட்டரியும் இதன் சிறப்பம்சமாகும். கூடுதலாக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.77 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 7360 டர்போ சிப்செட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் இந்த போன் விற்பனையாகிறது. 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.29,999 முதல் விற்பனையாகிறது.

2. ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி போனில் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா இடம்பெற்றுள்ளது. இதன் சென்சார் 1/1.4 இன்ச் அளவு கொண்டது. பெரிய சென்சார் என்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எதிர்பார்க்கலாம். இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும் உள்ளது. செல்ஃபிக்காக 20 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் மூலம் இது இயங்குகிறது. 45W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,580mAh பேட்டரியும் இதில் உள்ளது. மேலும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.29,999 முதல் விற்பனையாகிறது.

3. நத்திங் போன் 3a புரோ

நத்திங் போன் 3a புரோ போனில் தனி டெலிஃபோட்டோ கேமராவுடன் வருகிறது. இதன் பின்புறத்தில் 3 கேமராக்கள் உள்ளன. முக்கியமாக 50 மெகாபிக்சல் கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா. ஆகிய கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும்,டெலிஃபோட்டோ சென்சார் 3x ஆப்டிகல் ஜூம் வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் தொலைவில் உள்ள பொருட்களை குவாலிட்டியாக போட்டோ எடுப்பவர்களுக்கு இந்த போன் ஏற்றது. செல்ஃபிக்காக 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. மேலும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.27,999 முதல் விற்பனையாகிறது.

இதையும் படிக்க : 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை?.. ஆலோசனை மேற்கொள்ளும் இந்திய அரசு!

4. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போனில் 2 பின்புற கேமராக்கள் உள்ளன. குறிப்பாக 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா இதில் இடம்பெற்றுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.26,999 முதல் விற்பனையாகிறது.

5. சாம்சங் கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி

சாம்சங் கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி போனில் 3 பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. அதன் படி 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என 3 வகைககளில் இடம் பெற்றுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டா ரூ.25,999 முதல் விற்பனையாகிறது.

Follow Us