AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்-ல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது?.. வெளியான ஷாக் தகவல்!

Update Your Phone Now To Use WhatsApp | உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் மெட்டாவின் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்-ல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது?.. வெளியான ஷாக் தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Oct 2026 17:57 PM IST

உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் மிக முக்கிய செயலியாக மெட்டாவின் (Meta) வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. பலருக்கும் இந்த செயலி தங்களது அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது. பலருக்கும் வாட்ஸ்அப் செயலி இல்லை என்றால், அந்த நாளே இயங்காத சூழல் உள்ளது. இத்தகைய மிக முக்கிய செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சில பழைய ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (IOS) செயலிகளில் இனி வாட்ஸ்அப் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் : வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை வரலாம்

நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் பயன்படுத்துகிறீர்களா, அப்படியென்றால் உங்களால் விரைவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகலாம். காரணம், பழைய ஆபரேட்டிங் சிஸ்டம் (Old Operating System) கொண்ட சில சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை அணுகுவதற்கான அனுமதியை தடுக்கக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ChatGPT-ல் வந்த Try On Clothes அம்சம்.. இனி ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் சுலபம்!

குறிப்பிட்ட பயனர்களுக்கு காட்டப்படும் எச்சரிக்கை திரை

WABetaInfo தகவலின்படி, சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய எச்சரிக்கை திரை காட்டப்படுகிறது. அதில், வாட்ஸ்அப் செயலியில் மீண்டும் லாக் இன் செய்வதற்கு முன்னதாக போனி ஆபரேட்டிங் சிஸ்டத்தை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செயுமாறு கூறப்படுகிறது. அதாவது, போனி செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, Software Update-ஐ செக் செய்து, கிடைக்கும் புதிய அப்டேட்டை நிறுவிய பிறகே வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப கட்டணம்.. வந்தது புதிய முறை.. யாருக்கு பொருந்தும்?

இந்த மாற்றம் வாட்ஸ்அப்பின் தனி அப்டேட் மூலம் வரவில்லை. சர்வர் பக்கத்தில் சோதனை செய்யப்படுவதன் காரணமாக, தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே இது காட்டப்படுகிறது. எந்த வகையிலான ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இது பொருந்தும் என்பது குறித்து வாட்ஸ்அப் இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Follow Us