AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆன்லைன் ஸ்டேட்டஸ்… பிறந்தநாள் நினைவூட்டல் – வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய கான்டாக்ட் டேப் வசதி

WhatsApp Contacts Feature : காண்டாக்ட் டேப் என்ற புதிய வசதியை ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் காண்டாக்டில் உள்ளவர்களை எளிதாகத் தேடுவது, யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

ஆன்லைன் ஸ்டேட்டஸ்… பிறந்தநாள் நினைவூட்டல்  – வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய கான்டாக்ட் டேப் வசதி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Oct 2026 15:43 PM IST

பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், பயனர்களுக்காக தனியாக ஒரு காண்டாக்ட் டேப் என்ற புதிய வசதியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் காண்டாக்டில் உள்ளவர்களை எளிதாகத் தேடுவது, யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது, நண்பர்களின் பிறந்தநாளை அறிந்துகொள்வது போன்ற வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்க உள்ளன. தற்போது ஆண்ட்ராய்டு செயலிக்காக மட்டும் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய கான்டாக்ட் டேப் வசதி

புதிய காண்டாக்ட்ஸ் டேப்பின் மேல் பகுதியில் ஒரு சர்ச் பார் இடம்பெறும். இதில் ஒருவரின் பெயர், போன் நம்பர் அல்லது யூசர்நேம் மூலம் அவரைத் தேடலாம். தொடர்புகளின் பட்டியலை 2 ஆப்சன்களில் வரிசைப்படுத்திக்கொள்ளும் வசதி கொடுக்கப்படும். மேலும், Activity என்ற ஆப்சனைத் தேர்வு செய்தால், அந்த நேரத்தில் ஆன்லைனில் இருப்பவர்கள்  காட்டப்படுவார்கள். இதில் A முதல் z வரையிலான வரிசை முறையில், அனைத்து காண்டாக்ட்களும் பெயர் வரிசைப்படி காட்டப்படும்.

மேலும் ஒரு நபர் ஆன்லைனில் இருந்தால், அவரது புரொஃபைல் போட்டோவில் பச்சை நிற புள்ளி இடம் பெறும். இதன் மூலம் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிந்து தொடர்பு கொள்ளமுடியும். அதே போல ஆஃப்லைனில் இருப்பவர்களுக்கு, அவர்கள் கடைசியாக எப்போது வாட்ஸ்அப் பயன்படுத்தினார்கள் என்ற லாஸ்ட் சீன் விவரம் காட்டப்படும். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் பிரைவசி செட்டிங்ஸ் மூலம் இந்த ஆப்சனைத் தவிர்த்தால் நமக்கு காட்டாது.

இதையும் படிக்க : விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

அதே போல இந்த ஆப்சனில் பிறந்தநாள் நினைவூட்டல் வசதியும் இடம்பெறவுள்ளது. அதன்படி ஒருவருக்கு அன்று பிறந்தநாள் என்றால், அவரது பெயருக்கு அருகே கேக் எமோஜியுடன் Birthday today என்ற வாசகத்துடன் இடம் பெறும். இதனால், தனியாக சென்ற சாட் செய்யாமல், காண்டாக்ட் டேப் என்ற பக்கத்தில் இருந்தே நேரடியாக அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப முடியும்.

இதுதவிர, காண்டாக்ட் லிஸ்ட்டில் கீழே மெட்டா ஏஐக்க்கான இணைப்பும், அதற்குக் கீழே வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களுக்கு அழைப்பு லிங்க் அனுப்பும் ‘Invite a friend என்ற ஆப்சனும் இடம் பெறும எனக் கூறப்படுகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் ஏற்கனவே வைத்துள்ள பிரைவசி செட்டிங்ஸ் பகுதியில் கொடுத்துள்ள அனுமதிகளுக்கு ஏற்ப இந்த டேப் செயல்படும். இதன் மூலம் ஒருவர் தனது ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்திருந்தால், அவருக்கு பச்சை நிற புள்ளி காட்டப்படாது.

இதையும் படிக்க : 15 விநாடியில் இருந்து 30 விநாடியாக அதிகரிப்பு: வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்

அதே போல Last Seen வசதிக்கு அனுமதி கொடுக்காதவர்களுக்கு, சமீபத்திய ஆன்லைனில் இருந்தவர்களின் லிஸ்டில் இடம்பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. வரும் அப்டேட்களில் இது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us