AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜிமெயிலில், இமெயிலை ஸ்கெடியூல் செய்வது எப்படி?.. Step By Step Guide!

Schedule Emails In Gmail | கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் செயலியை முறையான தகவல் பரிமாற்றத்திற்காக பலரும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஜிமெயில் செயலி மூலம் இமெயில்களை ஸ்கெடியூல் செய்வது எப்படி, அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயிலில், இமெயிலை ஸ்கெடியூல் செய்வது எப்படி?.. Step By Step Guide!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Oct 2026 22:50 PM IST

பல ஆண்டுகளாக முறையான உரையாடல்களுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய தளமாக ஜிமெயில் (Gmail) உள்ளது. அலுவலகங்களில் ஊழியர்களுடன் உரையாடுவது முதல் பல்வேறு தேவைகளுக்கு ஜிமெயில் பயன்படுத்தப்படுகிறது. பலருக்கு இமெயில் வரும் செய்திகளை எப்படி படிப்பது, வேறு ஒருவருக்கு எப்படி ஜிமெயில் அனுப்பவது உள்ளிட்ட சில அம்சங்கள் தான் தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாத பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஜிமெயிலில் உள்ளது. இந்த நிலையில் ஜிமெயிலில், இமெயிலை ஸ்கெடியூல் (eMail Schedule) செய்து அது தானாகவே சென்று சேறுவதை உறுதி செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயிலில், இமெயிலை ஸ்கெடியூல் செய்வது எப்படி?

நீங்கள் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள், உங்களது சக பணியாளருக்கும் உங்களுக்கு நேர இடைவெளி உள்ளது, நீங்கள் உரிய நேரத்திற்கு ஒரு இமெயிலை அனுப்ப நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த ஸ்கெடியூல் ஆப்ஷன் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நீங்கள் அனுப்ப வேண்டிய இமெயிலை அனுப்பிவிடலாம்.

இதையும் படிங்க : ரூ.30,000 பட்ஜெட்டில் 5 சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?

ஜிமெயிலில் இமெயிலை ஸ்கெடியூல் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் ஜிமெயில் செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. அதில் வலது பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Compose என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் நீங்கள் வழக்கம் போல என்ன இமெயில் அனுப்ப நினைக்கிறீர்களோ அதனை டைப் செய்யலாம்.
  4. அதில் Send பட்டனுக்கு அருகில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அதில் மூன்று ஆப்ஷன்கள் தோன்றும். அவற்றில், Schedule Send என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  6. Schedule Send ஆப்ஷனை தேர்வு செய்து தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : இன்றுமுதல் வாட்ஸ்அப் பிசினஸ் கட்டண உயர்வு – புதிய மெசேஜிங் கட்டண முறை அமல்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி நீங்கள் இமெயிலை ஸ்கெடியூல் செய்யும் பட்சத்தில் நீங்கள் தேர்வு செய்த நேரத்தில் சரியாக இமெயில் சென்று சேர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us