AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Vivo X Fold 6 Launched in India | விவோ நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Oct 2026 22:03 PM IST

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை (Budget Range Smartphones) தொடர்ந்து அறிமுகம் செய்து, இந்திய பொதுமக்கள் மத்தியில் நல்ல இடத்தை விவோ (Vivo) பிடித்துள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தனது ஃபோல்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை (Vivo X Fold 6 Smartphone) இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ

விவோ நிறுவனம் பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்ட தனது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Mediatek Dimensity 9500 Chipset அம்சத்தை கொண்டுள்ளது. அதுமட்டும்னறி இந்த ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறப்பு அம்சமாக இந்த ஸ்மார்ட்போனில் 7,000 mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப கட்டணம்.. வந்தது புதிய முறை.. யாருக்கு பொருந்தும்?

விவோ எக்ஸ் ஃபோல்டு – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் சூப்பர் எடிஷன் என அழைக்கிறது. 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்யோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.2,19,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us