AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொடர்ந்து 32 மணி நேரம் இயங்கும்! இந்தியாவில் 10,000mAh பேட்டரியுடன் விவோ எஸ்2 போன் அறிமுகம்

Vivo S2 FE : விவோ நிறுவனம் தனது எஸ் சீரிஸ் வரிசையில் புதிய விவோ எஸ்2 எஃப்ஜி 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.38,999 விலையிலும், 8GB + 128GB வேரியண்ட் ரூ.42,999 விலையிலும் கிடைக்கிறது.

Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Oct 2026 14:40 PM IST
விவோ நிறுவனம் தனது எஸ் சீரிஸ் வரிசையில் புதிய விவோ எஸ்2 எஃப்ஜி 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மிக முக்கிய சிறப்பம்சம் அதன் சக்திவாய்ந்த 10,000mAh திறன் கொண்ட பேட்டரி ஆகும். மற்றொரு சிறப்பம்சம் இதன் 1.5K AMOLED டிஸ்ப்ளே.  இது பிரகாசமான சூரிய ஒளியிலும் தெளிவான காட்சியை வழங்குவதோடு, சிறந்த எச்டி ஸ்ட்ரீமிங் அனுபவத்தையும் அளிக்கிறது.

1 / 7
மேலும் இது 6.83-அங்குல 1260×2800 பிக்சல் 1.5K AMOLED ஸ்கீரினைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே எச்டிஆர்10+, 120Hz வரையிலான ரிஃப்ரெஸ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் வரையிலான அதிகபட்ச HBM பிரைட்னஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த விவோ போன் 2.5GHz ஆக்டா-கோர் MediaTek Dimensity 7300e 6nm பிராசசர் மூலம் இயங்குகிறது.2

2 / 7
இது 6ஜிபி அல்லது 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜூடன் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6 மூலம் இயங்குகிறது. இதில் டிஸ்ப்ளேக்குள் அமைந்த ஆப்டிகல் கைரேகை சென்சார்,  இன்ஃபாரெட் சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68+IP69 தரநிலைகள் மற்றும் ராணுவத் தரத்திலான உறுதித்தன்மை போன்ற அம்சங்கள் உள்ளன.

3 / 7
இதில் சோனி ஐஎம்எக்ஸ்852 சென்சார் கொண்ட 50எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமராமற்றும் 'ஆரா லைட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 2 பின்புற கேமரா அமைப்பு உள்ளது. மேலும், செல்ஃபிக்காக 32 எம்பி முன்பக்க கேமரா (f/2.0 அப்பர்ச்சர்) வழங்கப்பட்டுள்ளது. 2  சிம் ஆதரவு, 5ஜி மற்றும் டூயல் 4ஜி வோல்ட் ஆகியவை இதன் பிற முக்கிய அம்சங்களாகும்.

4 / 7
இது 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 10,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. குறிப்பாக நீண்ட நேர எலக்ட்ரானிக் இயந்திர சோதனை மேற்கொள்ளப்பட்டு போன் கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இச்சாதனையை நிகழ்த்த, இந்த போன் தொடர்ந்து 32 மணிநேரம் 37 நிமிடங்கள் இயங்க வைக்கப்பட்டது.

5 / 7
விவோ எஸ்2 எஃப்ஜி 5ஜியின் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.38,999 விலையிலும், 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.42,999 விலையிலும் கிடைக்கிறது. இதை விவோவின் அதிகாரப்பூர்வ இணையதளம், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள், அமேசான் மற்றும்  ஃபிளிப்கார்ட் ஆகியவற்றின் மூலம் வாங்கலாம். இதன் விற்பனை அக்டோபர் 20, 2026 அன்று தொடங்குகிறது.

6 / 7
நேரடி விற்பனை நிலையங்களில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு  முக்கிய வங்கிகள், கிரெடிட் பார்ட்னர்கள் மற்றும் யுபிஐ மூலம் 10 சதவிகிதம் வரை உடனடி கேஷ்பேக், 10 சதவிகிதம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது 15 மாதங்கள் வரை ஜீரோ டவுன் பேமெண்ட் வசதி ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் வாடிக்கையாளர்கள் 10 சதவிகிதம் உடனடி வங்கித் தள்ளுபடி, 10 சதவிகிதம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது 12 மாதங்கள் வரை வட்டி இல்லா தவணை முறை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

7 / 7
Follow Us