ChatGPT குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல.. ஷாக் தகவல்.. என்ன தெரியுமா?
ChatGPT Safety for Kids Questioned | ஓபன் ஏஐ நிறுவனம் ஆகஸ்ட் மாதம் டீனேஜர்களுக்கான சாட்ஜிபிடியை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இதனை ஆய்வு செய்தபோது அது குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்பது தெரிய வந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகில் உள்ள பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை போலவே, தனிமனித வாழ்க்கையிலும் ஏஐ-ன் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதாவது, பல்வேறு தரப்பினரும் தங்களது அன்றாட வாழ்க்கையில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சாட்ஜிபிடி குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என்று ஆய்வுகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவு அம்சம் குழந்தைகளுக்கு ஆபத்து
ஓபன் ஏஐ (Open A) Iநிறுவனம் டீனேஜர்களுக்கான சாட்ஜிபிடியை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. 13 வயது முதல் 17 வயது வரை உள்ள டீனேஜர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் இந்த சாட்ஜிபிடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சாட்ஜிபிடியில் உத்தரவாதம் வழங்கப்பட்டதை போல பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை என்று Media’s Youth AI Safety Institute கூறியுள்ளது.
இதையும் படிங்க : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. நத்திங் 4a, 4a Pro மற்றும் 4b ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
4,000-க்கும் மேற்பட்ட பிராம்ட்களை சோதனை செய்த ஆய்வாளர்கள்
இந்த நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனம் இளைஞர்களை மையப்படுத்திய சோதனையை ஆகஸ்ட் 18, 2026 அறிவிப்பதற்கு முன்னதாகவும், அதற்கு பிறகும் என இரண்டு கட்டங்களாக இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையில் 13 வயது முதல் 17 வயது வரை உள்ள டீனேஜர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ChatGPT-ல் வந்த Try On Clothes அம்சம்.. இனி ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் சுலபம்!