விழாக்கால சேலை அறிவித்த ஆப்பிள் நிறுவனம்.. என்ன என்ன சலுகைகள்!
Apple Festival Sale 2026 | இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் விழாக்கால சேலை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனமும் தனது விழாக்கால சேலை அறிவித்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்ட நிலையில் சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை குவிக்க தொடங்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) ஆகிய நிறுவனங்கள் சேலை அறிவித்து விற்பனையை பார்த்த நிலையில், தற்போது கலத்தில் ஆப்பிள் நிறுவனமும் இறங்கியுள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனம் தனது விழாக்கால (Apple Festival Sale) சேலை அறிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு (Apple iPhone 18 Pro Smartphone) ரூ.15,000 தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அசத்தல் தள்ளுபடிகளை ஆப்பிள் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விழாக்கால சேலை அறிவித்த ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சேலில், நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அதன் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.7,000ம் உடனடி கேஷ்பேக் வழங்குகிறது. ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், இபோன் டுயோ மற்றும் ஐபோன் ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த உடனடி கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது. இதேபோல இந்த சேலில் ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17இ ஸ்மார்ட்போன்களை வாங்கும் நபர்கள் ரூ.1,000 உடனடி கேஷ்பேக் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : மீண்டும் அறிமுகமாகும் ஆர்குட் செயலி.. நிறுவனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.81,500
பழைய போன்களை மாற்றி புதிய போன்களை வாங்க நினைப்பவர்களுக்கும் ஆப்பிள் அசத்தல் சலுகையை வழங்குகிறது. அதாவது, பழைய ஐபோன்களை எக்ஸ்சேஞ் செய்வதற்கு ரூ.81,500 வரை ஆப்பிள் வழங்குகிறது. ஐபோன்களுக்கு மட்டுமன்றி, மேக்புக் பயனர்களுக்கு பல அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ஆப்பிள் வழங்குகிறது.
இதையும் படிங்க : விரைவில் அறிமுகமாகும் ஜியோமி 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. வெளியான முக்கிய தகவல்கள்!
அதாவது ஆப்பிள் மேக்புக் நியோவுக்கு ரூ.7,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதுவே 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் வாங்கும் நபர்கள் ரூ.10,000 கேஷ்பேக் பெற முடியும். 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் ரூ.15,000 கேஷ்பேக் உடன் விற்பனை செய்யப்படுகிறது.