AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விரைவில் அறிமுகமாகும் ஜியோமி 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. வெளியான முக்கிய தகவல்கள்!

Xiaomi 18 Pro Smartphone | ஜியோமி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விரைவில் தனது ஜியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகும் ஜியோமி 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. வெளியான முக்கிய தகவல்கள்!
ஜியோமி 18 ப்ரோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Oct 2026 21:53 PM IST

இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) அறிமுகம் செய்யும் நிறுவனமாக ஜியோமி (Xiaomi) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தனது அடுத்த ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்ய உள்ள ஜியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் (Xiaomi 18 Pro Smartphone) குறித்த சில சிறப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஜியோமி நிறுவனம் தனது அடுத்த புதிய ஸ்மார்ட்போனான ஜியோ 18 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் Flat 1.5K LTPO AMOLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Secondary 2.7 இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே அம்சமும் கொடுக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தொடர்ந்து 32 மணி நேரம் இயங்கும்! இந்தியாவில் 10,000mAh பேட்டரியுடன் விவோ எஸ்2 போன் அறிமுகம்

கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 சிப்செட் அம்சத்தை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் அம்சத்தை கொண்டு இருக்கும் என்றும், 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தும் டெலிகாம் நிறுவனங்கள்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!

இந்த ஸ்மார்ட்போனில் 7,000 mAh சிலிக்கான் கார்பம் பேட்டரி அம்சம் மற்றும் கொடுக்கப்படும் என்றும், சார்ஜ் செய்வதற்காக 100 வாட்ஸ் வயர்டு சாஜிங் அம்சம் மற்றும் 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. ஜியோ 17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.89,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது சிப்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் ஜியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us