ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் அன்பில் மகேஷுக்கு இறுகும் பிடி.. 2 நாள் அனுமதி வழங்கிய ஊழல் சிறப்பு நீதிமன்றம்.. .. விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
Rs.400 Crore Bribery Allegation Anbil Mahesh : ரூ. 400 கோடி லஞ்சம் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 3 பேரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ஊழல் சிறப்பு நீதிமன்றம் அனுமதியுளித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற்று தருவதாக கூறி ரூ. 400 கோடி லஞ்சம் பெறப்பட்ட வழக்கில் கைதான அன்பில் மகேஷ் உள்ளிட்ட 3 பேரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு பள்ளிகளின் உரிமையாளர்களிடம் ரூ. 400 கோடி வரை பணம் பெற்று விட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில், போலி தனியார் பள்ளிகள் சங்கத்தை நடத்தி வந்த பி.டி. அரசகுமார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், அவரது மேனேஜர் சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அன்பில் மகேஷ் உள்பட 3 பேருக்கு போலீஸ் காவல்
இந்த நிலையில், அன்பில் மகேஷ் உள்ளிட்ட 3 பேரையும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில் தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் பணம் வசூலித்தது யார், தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டது. வசூலிக்கப்பட்ட பணம் யார் யாருக்கெல்லாம் பிரித்து கொடுக்கப்பட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா முடிவு? விரைவில் கைதாகிறார்!
2 நாள்கள் அனுமதி வழங்கிய ஊழல் சிறப்பு நீதிமன்றம்
எனவே, மேற்கண்ட மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி எல். எஸ். சத்யமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூன்று பேரையும் இன்று புதன்கிழமை ( நவம்பர் 25- ஆம் தேதி) காலை 11:00 மணி முதல் நாளை ( வியாழக்கிழமை) மாலை மாலை 5 மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2- ஆவது முறை போலீஸ் காவலில் விசாரணை
ஏற்கனவே, 3 பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில், பெறப்பட்ட தொகை அன்பில் மகேஷ் வீட்டுக்கு கொண்டு சென்றதாக முத்துக்குமார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் மனைவியிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கதவை தட்டிய சிபிசிஐடி.. அதிர்ந்து போன தூத்துக்குடி இளைஞர்.. சோதனையில் சிக்கிய கிலோ கணக்கிலான தங்கம்!