AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காற்று மாசுவில் டெல்லியை முந்திய கும்மிடிப்பூண்டி – நாட்டிலேயே முதலிடம் – அதிர்ச்சி ரிப்போர்ட்

Gummidipoondi Air Pollution Alert : சென்னையை அடுத்த தொழில்துறை நகரமான கும்மிடிப்பூண்டியில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின் படி, நவம்பர் 21, 2026 அன்று 346 ஆகப் பதிவானது. இதனால், நகரின் காற்றின் தரம் 'மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டது.

காற்று மாசுவில் டெல்லியை முந்திய கும்மிடிப்பூண்டி – நாட்டிலேயே முதலிடம் – அதிர்ச்சி ரிப்போர்ட்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Nov 2026 11:27 AM IST

சென்னை, நவம்பர் 25 : கடந்த நவம்பர் 21, 2026 அன்று கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக்குறியீடு 342 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக டெல்லியில் பதிவான 265 என்ற அளவை விட கும்மிடிப்பூண்டியில் அதிகமாக இருந்தது. இதனையடுத்து நாட்டிலேயே மோசமான காற்றுத் தரம் கொண்ட பகுதிகளில் கும்மிடிப்பூண்டி முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைச்சர் ராஜீவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.

காற்று மாசுவில் டெல்லியை முந்திய கும்மிடிப்பூண்டி

சென்னையை அடுத்த தொழில்துறை நகரமான கும்மிடிப்பூண்டியில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின் படி, நவம்பர் 19, 2026 அன்று 305 ஆக இருந்த கும்மிடிப்பூண்டியின் காற்றின் தரக் குறியீடு, நவம்பர் 20, 2026 அன்று 321 ஆகவும், நவம்பர் 21, 2026 அன்று 346 ஆகப் பதிவானது. இதனால், நகரின் காற்றின் தரம் ‘மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னை நகரின் காற்றின் தரக் குறியீடு 224 ஆகப் பதிவானது.

இந்த காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது கடுமையான சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் காற்று மாசுவால் வாழத் தகுதியற்றவையாக மாறி வருவதாகவும், மாசுவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : கதவை தட்டிய சிபிசிஐடி.. அதிர்ந்து போன தூத்துக்குடி இளைஞர்.. சோதனையில் சிக்கிய கிலோ கணக்கிலான தங்கம்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தலைநகர் டெல்லியை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவிலேயே கும்மிடிப்பூண்டியில் தான் அதிக காற்று மாசு நிலவுவதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளிலும் மிக மோசமான காற்று மாசு நிலவும் சூழலில் அவை வாழத்தகுதியற்ற பகுதிகளாக மாறி வருவதைத் தடுக்க தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

காற்று மாசுத்தர குறியீட்டில் சென்னை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி முதலிடம் பிடித்தது அண்மைக்காலங்களில் இது தான் முதல் முறை என்றாலும், சென்ணை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்று மாக உச்சத்தை அடைந்திருக்கிறது என்பது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை புறநகர் பகுதிகள் காற்று மாசு தலைநகரமாக திகழ்வதை பாட்டாளி மக்கள் கட்சி நன்றாக அறிந்திருப்பதுடன், அதை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் பி.எம்.2.5 எனப்படும் 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான காற்று மாசு துகள்கள் மிகவும் ஆபத்தானவை ஆகும். பொதுமக்கள் சுவாசிக்கும் போது காற்றுடன் கலந்து நுரையீரலுக்கு செல்லும் இந்தத் துகள்கள் மனிதர்களுக்கு ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்புகள், இதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்காக அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது.

இதையும் படிக்க : அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு.. புதுச்சேரியில் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழப்பு.. அச்சத்தில் பொது மக்கள்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைத்து தொழிற்சாலைகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியில்லாத தொழிற்சாலைகளை, அவை சரி செய்யப்படும் வரை மூட ஆணையிட வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Follow Us