முதல்வர் விஜய் தலைமையில் 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு – என்ன எதிர்பார்க்கலாம்?
Tamil Nadu Investment Conclave 2026 : இரண்டாவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் விஜய் தலைமையில் நவம்பர் 25, 2026 இன்று கோவளத்தில் நடைபெறவுள்ளது . இந்த மாநாட்டில், 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 25 : இரண்டாவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் விஜய் தலைமையில் நவம்பர் 25, 2026 இன்று கோவளத்தில் நடைபெறவுள்ளது . இந்த மாநாட்டில், 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா (Minister Keerthana), தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யும் வகையில் தொழில்துறை சூழலை உருவாக்குவதே தங்களது இலக்கு என தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு
முதல்வர் விஜய் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 13, 2026 அன்று வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில், இதன் மூலம் ரூ.67,452 கோடி மூதலீடுகளும், 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான 2வது வெற்றி முதலீட்டாளர் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நவம்பர் 25, 2026 இன்று நடைபெறுகிறது.




இதையும் படிக்க : Tamil Nadu Weather today: கனமழை வெளுத்து வாங்கபோது…. 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை
என்ன எதிர்பார்க்கலாம்?
வருகிற 2036 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தவெக ஆட்சியமைத்த 6 மாதத்தில் 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 78 புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. . இதன் மூலம் ரூ.58,214 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகள், 65,786 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தமிழக முதலீடு செய்ய திட்டமிட்ட நிறுவனங்கள் ஆந்திரா நோக்கி செல்வதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசுக்கு முதலீடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் கைடனஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
அமைச்சரின் கீர்த்தனாவின் பதிவு
Tomorrow, we come together for the second edition of the Vettri Tamil Nadu Investment and Conversion Conclave.
Over the past six months, Tamil Nadu has made significant strides in attracting investments. But for us, the real measure of success is what happens after an MoU is signed.Are projects moving forward? Are investments translating into factories, production and jobs? Are we creating meaningful employment opportunities?
These are the questions we are focused on.Under the leadership of our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, our commitment is to build an industrial ecosystem where businesses can invest with confidence, projects can move forward with certainty, and investments translate into opportunities and prosperity across Tamil Nadu.
#CMJosephVijay #TamilNadu #VETTRI
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) November 24, 2026
இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட எக்ஸ் பதிவில், வருகிற நவம்பர் 24, 2026 அன்று வெளியிட்ட பதிவில், 2வது வெற்றி வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு மாற்றத்திற்கான மாநாட்டில் நாம் இணையவிருக்கிறோம்.
கடந்த ஆறு மாதங்களில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் சாதித்துள்ளது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் வெற்றியின் உண்மையான அளவுகோல். திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றனவா? முதலீடுகள் தொழிற்சாலைகளாகவும், உற்பத்தியாகவும், வேலைவாய்ப்புகளாகவும் மாறுகின்றனவா? அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோமா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிவதில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இதையும் படிக்க : கள்ளக்குறிச்சிலேயே பணியாற்ற விருப்பம்.. பெண் ஆட்சியரின் துணிச்சலான முடிவு.. கவிதா ராமு அளித்த ஆதரவு!
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில், தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யவும், திட்டங்கள் உறுதியுடன் செயல்படுத்தப்படவும், முதலீடுகள் தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புகளாகவும் வளமாகவும் மாறவும் ஏற்ற தொழில்துறைச் சூழலை உருவாக்குவதே எங்களின் நம்பிக்கை என தெரிவித்துள்ளார்.