மீண்டும் அறிமுகமாகும் ஆர்குட் செயலி.. நிறுவனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Orkut App Comeback | 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த செயலி தான் ஆர்குட். இந்த நிலையில், இந்த செயலியை மீண்டும் அறிமுகம் செய்ய அதன் நிறுவனர் திட்டமிட்டுள்ளார். இந்த செயலி மற்றும் அதன் சிறப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமாக சமூக ஊடக செயலிகளாக (Social Media Apps) ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை உள்ளன. இந்த நிலையில், முன்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற செயலி ஒன்று மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அது என்ன செயலி, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் அறிமுகமாகும் ஆர்குட் செயலி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு செயலி தான் ஆர்குட். இந்த செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் களமிறங்கிய நிலையில், இந்த செயலி இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனது. இந்த நிலையில் தான், அந்த செயலிக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நடவடிக்கையை அதன் நிறுவனர் மேற்கொண்டுள்ளார். அதாவது, அந்த செயலியின் நிறுவனர் ஆர்குட் புயுக்கொக்டென் அந்த தளத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டு அறிமுகம் செய்ய உள்ளார்.
இதையும் படிங்க : ஆன்லைன் ஸ்டேட்டஸ்… பிறந்தநாள் நினைவூட்டல் – வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய கான்டாக்ட் டேப் வசதி
எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஆர்குட் புயுக்கொக்டென்
The internet should help us find our people. Friendship. Community. A place to belong.
Help me bring Orkut back in that spirit. Add your name at https://t.co/FO48fJMjEq and share your supporter card with someone you want to bring along.
Love,
Orkut https://t.co/zesE18Y3Fd— Orkut Buyukkokten (@orkut) October 8, 2026
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மீண்டும் மனிதநேயமிக்க சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்குட் வலைதளத்தை புதுப்பிக்க தான் விரும்புவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தொடர்ந்து 32 மணி நேரம் இயங்கும்! இந்தியாவில் 10,000mAh பேட்டரியுடன் விவோ எஸ்2 போன் அறிமுகம்
20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற செயலி, மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.