ChatGPT-ல் Intelligent UI உடன் GPT-6 அறிமுகம் செய்த ஓபன் ஏஐ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
OpenAI GPT-6 Intelligent UI | உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், Intelligent UI உடன் கூடிய GPT-6 அம்சத்தை சாட்ஜிபிடியில் ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஓபன் ஏஐ (Open AI) நிறுவனம் உலகம் முழுவதும் சாட்ஜிபிடியில், ஜிபிடி 6 (GPT 6) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த அம்சத்தில் Intelligent UI-ஐ ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விசுவல் எலிமெண்ட்ஸ் (Visual Elements) மூலம் விடை அளிக்கப்படும். குறிப்பாக பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ற வகையில் Graphics, Charts, Forms, Buttons மற்றும் Interactive Tools ஆகிய வடிவங்களில் வெவ்வேறு வகைகளில் பதில் அளிக்கப்படும்.
Intelligent UI அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஜிபிடி 6
சாட்ஜிபிடி பிளஸ் பயன்படுத்தும் நபர்களுக்கு, உலக அளவில் இந்த Intelligent UI அம்சத்துடன் கூடிய ஜிபிடி 6 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் கூறியுள்ளது. ப்ரோ, பிசினஸ் உள்ளிட்ட பயனர்கள் இந்த அம்சத்தை பெற்றுள்ள நிலையில், இலவச பயனர்கள் அக்டோபர் 08, 2026 முதல் இந்த அம்சத்தை பெறுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : ChatGPT குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல.. ஷாக் தகவல்.. என்ன தெரியுமா?




ஜிபிடி 6 – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த Intelligent UI அம்சத்தின் உதவியுடன் நீங்கள் சாட்ஜிபிடியில் கேள்விகளை கேட்டால் அது அதற்கு பதில்களை மட்டும் உங்களுக்கு கொடுக்காது. அது, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப Charts, Graphics, Forms மற்றும் Interactive Elements மூலம் உங்களுக்கு பதில் அளிக்கும். ஒரு ரெசிபியை சமைப்பது எப்படி என கேட்பது முதல் ஒரு இடத்திற்கு செல்ல மேப் வழிகாட்டுதலை தேடுவது வரை என பல வித்தியாசமான கேள்விகளுக்கு பதில்களை வித்தியாசமாக வழங்கும்.
இதையும் படிங்க : பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்-ல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது?.. வெளியான ஷாக் தகவல்!
இந்த அம்சத்தில் கேள்விகளை கேட்டு முடிப்பதற்கு முன்னதாகவே, விடைகளை காட்ட தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஓபன் ஏஐ நிறுவனம் ஜிபிடி 6 வெப் சர்சுகளையும் மேம்படுத்தியுள்ளது. அதாவது, ஜிபிடி-5 விடவும் 44 சதவீதம் விரைவாகவே பதில்களை காட்டுவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.