அமேசான் சேல் – ரூ.20,000க்குள் 6 சிறந்த ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?
Amazon Great Indian Festival 2026 : பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தின் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026' சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ரூ.20,000க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்களை தேடுபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த கட்டுரையில் சிறந்த 6 ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி என அடுத்தடுத்து வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026’ சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மின்னணுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் புதிய போன் வாங்க நினைப்பவர்களுக்கு ஐகூ, ரெட்மி, ஒன்பிளஸ், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ரூ.20,000க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
- பொதுவகா ரூ.26,999 என்ற விலையில் விற்பனையாகும் ரெட்மி A7 ப்ரோ 5ஜி போன், தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 ரூ.14,497க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.15,000க்குள் 5ஜி போன் தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
- மேலும் வெளி மார்க்கெட்டில் ரூ.24,999 விலை கொண்ட ஒன்பிளஸ் N6 லைட் மாடல் போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 விறப்னையில் ரூ.15,999க்குக் கிடைக்கிறது. குறைந்த விலை.ிவ் ஒன்பிளஸ் போனைப் பயன்படுத்த விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
- அதே போல ரூ.29,999 என விலையில் விற்பனையாகி வந்த ரெட்மி 15C 5ஜி போனும் ரூ.15,999க்கு கிடைக்கிறது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் 5G வசதி தேவைப்படுவோருக்கு மற்றொரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
- மேலும், ரூ.19,999 விலையிலிருந்து சாம்சங் கேலக்ஸி M17e 5G போனானது விலை குறைக்கப்பட்டு ரூ.16,998க்குக் கிடைக்கிறது. சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் டிஸ்ப்ளே தரத்துக்குப் பெயர் பெற்ற சாம்சங் நிறுவனத்தின் போன் என்பதால் இது ரூ.20,000க்குள் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
- மேலும் ரூ.33,999 விலை கொண்ட ஐகூ Z11 லைட் 5ஜி போன் தற்போது ரூ.19,497க்கு அமேசானில் சேலில் விற்பனையாகிறது. சிறந்தசெயல்திறன் கொண்ட போன் வேண்டும் அதே நேரம் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த போன் மிகவும் பொருத்தமானது.
- அதனைத் தொடர்ந்து ரூ.29,999க்கு விற்பனையாகும் ஒன்பிளஸ் N6x போனானது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026ல் ரூ.19,999 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைப் பிரிவில் பலரும் விரும்பி வாங்கும் மாடலாக இது உள்ளது.
இதையும் படிக்க : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
கூடுதல் சலுகைகள்
மேலே குறிப்பிட்ட விலையுடன் கூடுதல் சலுகைகளையும் பெற முடியும். எஸ்பிஐ கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு அதிகபட்சம் 10 சதவீதம் வரை உடனடித் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் விலை மேலும் குறையும்.




இதுதவிர, வட்டியில்லா தவணை வசதி, குறிப்பிட்ட மாடல்களுக்குக் கூப்பன் தள்ளுபடி, அமேசான் பே மூலம் பணம் செலுத்தினால் கேஷ்பேக் போன்ற சலுகைகளும் உள்ளன. இவற்றை முறையாகப் பயன்படுத்தினால் கணிசமான தொகையைச் சேமிக்கலாம்.