AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை சந்திக்க திட்டம் – என்ன காரணம்?

Tamil Nadu CM Vijay to Visit Andhra : தமிழக முதல்வர் விஜய் அக்டோபர் 13, 2026 அன்று ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயவாடாவில் ​​கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய்  – ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை சந்திக்க திட்டம் – என்ன காரணம்?
பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Oct 2026 20:04 PM IST

சென்னை, அக்டோபர் 10 : தமிழக முதல்வர் விஜய் அக்டோபர் 13, 2026 அன்று ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயவாடாவில் ​​கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து,ஆந்திர மாநில துணை முதல்வரும் பிரபல நடிகருமான பவன் கல்யாணையும் முதல்வர் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர முதல்வர்  மற்றும் பவன் கல்யாணை சந்திக்கும் முதல்வர் விஜய்

மேலும், ஆந்திர பிரதேசம் மாநிலம் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருடனான சந்திப்புக்குப் பிறகு, அவர் ‘விஜயவாடா உத்சவ் 2.0’ நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என கூறப்படுகிறது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற கொண்ட பிறகு ஆந்திரா செல்வது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : சென்னை மக்களே Ride செல்ல ரெடியா? பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ சேவை நேரம் அறிவிப்பு.. முழு விவரம்!

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை தீவுத்திடலில் மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது இடைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் தவெக வென்ற நிலையில் ராகுல் காந்தி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் சென்னை பாலவாக்கத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் தோனியின் கஃபேயில் உணவருந்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகில் கலந்துகொள்ளவும் பிரதம் நரேந்திர மோடி அக்டோபர் 11, 2026 நாளை சென்னை வருகிறார். மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமருடன் முதல்வர் விஜய்யும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியுடன்  பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் நடைபெறும் இசைஞானி இளையாராஜா ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.

இதையும் படிக்க : “உலகத் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்”: நவி பிள்ளைக்கு நோபல் பரிசு – கமல்ஹாசன் வாழ்த்து

முன்னதாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கடந்த மே 27, 2026 அன்று டெல்லி சென்ற முதல்வர் விஜய் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, மேகேதாட்டு அணை, இருமொழி கொள்கை, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பிஎம்ஸ்ரீ திட்ட நிதி, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மேம்பாடு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கினார்.

Follow Us