AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Solar Subsidy : வீடுகளில் சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் 'தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம்' பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள், விண்ணப்பிப்பது எப்படி என பார்க்கலாம்

சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Oct 2026 16:04 PM IST

சென்னை, அக்டோபர் 10 : வீடுகளில் சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் ‘தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம்’ பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. சுமார் 200 சதுர அடி இடம் இருந்தால், வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்து, மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.

சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்

பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2024 ஆம் ஆண்டு இலவச சூரிய மின் சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் வருகிற 2027 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்குச் சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்துவதே இதன் இலக்கு. மாநில அரசுகளுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையும் படிக்க : “CM விஜய் பிரசாரம் செய்ததை சொல்றாங்களே.. அப்போ இவங்க பண்ணதெல்லாம் என்ன?”.. வைகோ காட்டமான கேள்வி!

தமிழகத்தில் இந்தத் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நிலையில், மாநில அரசின் கூடுதல் மானியத்துடன் அதை விரிவுபடுத்தும் வகையில் கடந்த 2026 செப்டம்பரில் ‘தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் வீடுகளில் சோலார் பேனல்களை அமைப்பதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.

மானியம் எவ்வளவு?

பேனலின் கிலோவாட்டுக்கு ஏற்ப மானியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மானியத்துடன் மாநில அரசின் பங்கும் சேர்த்து வழங்கப்படுகிறது.

  1. அதன் படி 1 கிலோவாட் சோலார் பேனலுக்கு மத்திய அரசு ரூ.30,000 மற்றும் மாநில அரசின் ரூ.5,000 சேர்த்து ரூ.35,000 வழங்கப்படும்.
  2. அதே போல 2 கிலோவாட் பேனலுக்கு மத்திய அரசு ரூ.60,000 மற்றும் மாநில அரசு ரூ.10,000 சேர்த்து ரூ.70,000 வழங்கப்படும்.
  3. மேலும், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும் சோலார் பேனலுக்கு மத்திய அரசு ரூ.78,000 மற்றும் மாநில அரசு ரூ.22,000 சேர்த்து அதிகபட்சம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

சூரிய மின்சக்தித் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள விமலேந்திரன் இது தொடர்பாக தெரிவித்ததாவது, மின் பயன்பாடு குறைவாக உள்ள சிறிய வீடுகளுக்கு 1 கிலோவாட் பேனல் சரியான தேர்வு. நாளொன்றுக்கு 3 முதல் 5 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இது போதுமானது. ஒன்று அல்லது இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடுகளில் மின்விசிறி, விளக்குகள், டிவி, செல்போன் சார்ஜிங் போன்ற அன்றாடத் தேவைகளை இதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.

இதையும் படிக்க : முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு.. கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை.. பின்னணி என்ன!

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க வீட்டுக்குப் பட்டா கட்டாயமில்லை. பின்வரும் ஆவணங்கள் இருந்தால் போதும்:

  • மின் இணைப்பு சர்வீஸ் எண் மற்றும் மின் அட்டை
  • ஆதார் கார்டு
  • வங்கிக் கணக்குப் புத்தகம்

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்க விரும்புகிறவர்கள்   https://www.tnebltd.gov.in/usrp என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பேனல் அமைக்கப்பட்டு, அரசு மானியம் விடுவிக்கப்படும்.

Follow Us