புலிக்கூண்டுக்குள் நுழைந்த இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன?.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
Man Enters Tiger Cage in UK Zoo | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பூங்கா ஒன்றில் புலி கூண்டில் ஒருவர் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள பூங்கா ஒன்றில் புலிக் கூண்டுக்குள் நுழைந்த இளைஞர், புலி கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புலிக்கூண்டுக்குள் நுழைந்த இளைஞர் – அடுத்து நடந்தது என்ன?
இங்கிலாந்தில் யார்க்ஷயர் வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் உள்ள புலிக்கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். புலிக்கூண்டுக்குள் சென்ற அந்த நபரை புலி, மிக கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், இந்த ஷாக் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கேப்டனுக்காக விமான குழுவினர் செய்த நெகிழ்ச்சி செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
SENSITIVE | A young man who entered a tiger’s cage in England lost his life after being attacked by the tiger. https://t.co/vGpKD7DCTQ
— Natacha (@Queen_natacha11) October 11, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் புலி கூண்டுக்குள் இருக்கிறார். அவரை அந்த கூண்டில் இருக்கும் புலி சீண்டிக்கொண்டே இருக்கிறது. அவர் அதனை தடுக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த புலி அவரை கடுமையாக தாக்க தொடங்குகிறது. அவ்வாறு அந்த புலியிடம் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அவர், போராட முடியாமல் கீழே படுத்துவிடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : ஆட்டோ கட்டணத்தால் வெடித்த சந்தை.. ஓட்டுநர், இளம் பெண்கள் இடையே மோதல்!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த இளைஞரின் நிலை குறித்து கவலையுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.