AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : இனிப்புக்கடையில் கழிவறையில் வைத்து கழுவப்படும் பாத்திரம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

Sweet Shop Utensils Washed in Toilet | சமூக ஊடகங்களில் நாளுக்கு நாள் பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சத்தீஸ்கரில் உள்ள இனிப்பு கடை ஒன்றில், கழிவறையில் வைத்து பாத்திரங்கள் கழுவப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Viral Video : இனிப்புக்கடையில் கழிவறையில் வைத்து கழுவப்படும் பாத்திரம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Oct 2026 21:41 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக சில வீடியோக்கள் மனிதர்கள் செய்யும் தவறுகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் தான், இனிப்புக்கடை ஒன்றில் பாத்திரங்கள் கழிவறையில் வைத்து கழுவப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனிப்புக்கடையில் கழிவறையில் வைத்து கழுவப்படும் பாத்திரம்

மனிதர்களின் வாழ்வின் முதன்மை ஆதாரமே உணவு தான். அந்த உணவு ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான உணவகங்கள் மற்றும் கடைகளில் உணவுகள் மிகவும் அசுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், சத்தீஸ்கரில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் கழிவறையில் பாத்திரம் கழுவப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : AI கேமராவின் சொதப்பல்.. கிடாரால் வந்த ரூ.500 அபராதம்.. ட்ராபிக் சிக்னல் குழப்பம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இனிப்பு கடை ஒன்றில் பெண் ஒருவர் கழிவறையில் வைத்து பாத்திரங்களை கழுவுகிறார். அதனை கண்ட வாடிக்கையாளர் ஒருவர், ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு அந்த கடையை சேர்ந்தவர் அவசரத்திற்கு இதனை செய்வோம் என கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாக தொடங்கிய நிலையில், உணவுத்துறை இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

Follow Us