கேப்டனுக்காக விமான குழுவினர் செய்த நெகிழ்ச்சி செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Flight Crew Celebrates Pilot's Last Flight | இணையத்தில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், விமான குழுவினர் விமான கேட்பனின் கடைசி விமான பயணத்தை கொண்டாடும் வகையில் நடுவானில் கேஸ் செய்து கொண்டாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் நடைபெறும் முக்கிய, சுவாரஸ்ய மற்றும் அழகான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்கள் உலம் எவ்வளவு அழகானது, உலகில் வாழும் மக்கள் எவ்வளவு அழகானவர்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இருக்கும். அந்த வகையில், விமான குழுவினர் தங்களது விமானியின் கடைசி பயணத்தை கொண்டாடும் வகையில், பறந்துக்கொண்டு இருக்கும் விமானத்தில் கேக் தயார் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேப்டனுக்காக விமான குழுவினர் செய்த நெகிழ்ச்சி செயல்
அன்பு ஒன்றுதான் மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். உறவுகள், குடும்பங்களுக்கு இடையே மட்டுமன்றி, பழகும் நபர்களிடமும், சந்திக்கும் நபர்களிடமும் அன்பு காட்டுவது, அன்பை பெறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த நிலையில் தான், விமானியின் கடைசி விமான பயணத்தை அவரது குழுவினர் நடுவானில் பறந்தபடி கேக் தயாரித்து கொண்டாடுவது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : விபத்துக்குள்ளான நெய் லாரி.. பாத்திரங்களில் அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், விமான பணிப்பெண் ஒருவர் தங்களிடம் இருக்கும் பிஸ்கெட்டுகள் மற்றும் சாக்லெட்டுகளை வைத்து அங்கிக்கும் அவணில் வைத்து வேக வைக்கிறார். பிறகு அதன் மீது பால் உள்ளிட்ட பொருட்களை ஊற்றி அந்த கேக்கை மேலும் பக்குவம் செய்கிறார். பிறகு அந்த கேக்கை அங்குள்ள அனைவருக்கும் சாப்பிட கொடுக்கிறார். அனைவரும் அதனை சாப்பிட்டுவிட்டு மிகவும் நன்றாக உள்ளதாக கூறுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : தண்ணீரில் தத்தளித்த யானைக் குட்டி.. படகில் சென்று மீட்ட மீனவர்கள்!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.