AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : விபத்துக்குள்ளான நெய் லாரி.. பாத்திரங்களில் அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

Ghee Truck Overturns in Uttar Pradesh | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், நெய் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : விபத்துக்குள்ளான நெய் லாரி.. பாத்திரங்களில் அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
விபத்துக்குள்ளான நெய் லாரி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Sep 2026 14:05 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உலகின் எந்த மூலையில், சிறிய சம்பவம் நடந்தாலும் அது உலகிற்கு தெரிய வர பெரிய காரணமாக உள்ளன. இதன் காரணமாக, உலகின் எந்த பகுதியில் ஏதேனும் அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமிக்க சம்பவங்கள் நடந்தாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், விபத்தில் சிக்கிய நெய் லாரியில் இருந்து பொதுமக்கள், பாத்திரங்களை கொண்டுவந்து நெய் எடுத்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

விபத்தில் சிக்கிய நெய் லாரி

உணவு பொருட்கள் பெரிய பெரிய கண்டெய்னர் லாரிகள் மூலம் உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு, வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள், வாகனங்கள் விபத்துக்குள்ளானால் வீணாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் நெய் ஏற்றிச் சென்ற் லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், பொதுமக்கள் சாலையில் கொட்டி கிடக்கும் நெய் அள்ளிச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : நாயை ஆற்றில் வீசிய பெண்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

இணையத்தில் வெளியாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சரக்கு வாகன் கவிழ்ந்த நிலையில் சாலை முழுவதும் நெய் சிதறி கிடக்கிறது. இந்த நிலையில், சாலையில் கொட்டிக் கிடக்கும் நெய்யை பொதுமக்கள் பாத்திரங்களில் அள்ளிச் செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : காரின் பேனட் மீது வைத்து இளம் பெண்ணை இழுத்துச் சென்ற நபர்.. ஷாக் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us