AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆட்டோ கட்டணத்தால் வெடித்த சந்தை.. ஓட்டுநர், இளம் பெண்கள் இடையே மோதல்!

Bengaluru Auto Fare Dispute Turns Violent | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், ஆட்டோ கட்டணத்தால் வெடித்த மோதலில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இளம் பெண்கள் சண்டையிட்டுக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஆட்டோ கட்டணத்தால் வெடித்த சந்தை.. ஓட்டுநர், இளம் பெண்கள் இடையே மோதல்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Sep 2026 20:11 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். உலக அளவில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்ய மற்றும் அசாத்தியாமான சம்பவங்கள் பல இணையத்தில் வெளியாகி வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், பெங்களூரில் (Bengaluru) ஆட்டோ கட்டணம் தொடர்பாக பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆட்டோ கட்டணத்தால் வெடித்த சந்தை

பொதுமக்கள் மிக சுலபமாக பயணம் செய்யக்கூடிய வாகனமாக  ஆட்டோக்கள் உள்ளன. பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும் நிலையில், இருக்கும் இடத்தில் இருந்தே பயணம் செய்ய ஆட்டோக்கள் மிகவும் உதவியாக உள்ளன. ஆனால், ஆட்டோ ஓட்டுநர்களிடம் கட்டணத்தை பேசி முடிவு செய்வதுதான் பெரிய சிக்கலாக உள்ளது. இந்த நிலையில், ஆட்டோ கட்டணத்துக்காக ஓட்டுநர் மற்றும் இளம் பெண்கள் சண்டையிட்டுக்கொள்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : தண்ணீரில் தத்தளித்த யானைக் குட்டி.. படகில் சென்று மீட்ட மீனவர்கள்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெங்களூரு சாலையில் இளம் பெண்கள் இருவர் ஆட்டோ ஓட்டுநர் உடன் சண்டையிடுகின்றனர். அந்த பெண்கள் இணைந்து ஆட்டோ ஓட்டுநரை கடுமையாக தாக்கும் நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநரும் அந்த பெண்களை மிக கடுமையாக தாக்குகிறார். அதனை அங்கிருக்கும் சிலர் தங்களது ஸ்மார்ட்போன்களில் வீடியோவாக பதிவு செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us