Viral Video : சாலையோர உணவகத்தில் நடந்த கலவரம்.. இரண்டு குழுக்கள் இடையே பயங்கர மோதல்.. வைரல் வீடியோ!
Uttar Pradesh Roadside Eatery Fight | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் சாலையோர கடையில் நடந்த சண்டை தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். உலகில் எந்த மூலையில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகும். அந்த வகையில் தான், உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) சாலையோர உணவகம் ஒன்றில் நடந்த சண்டை தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாலையோர உணவகத்தில் நடந்த கலவரம்
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளதுதான் சாலையோர உணவுகள். இந்தியர்கள் மத்தியில் உணவுக்கான முக்கியத்துவம் சற்று அதிகமாகவே இருக்கும். அதன் காரணமாக திருமண நிகழ்ச்சிகள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்காக சண்டை நடப்பது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் சாலையோர உணவகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Hapur, UP .
War of pakoda 2026 AD pic.twitter.com/EDTAlPWFdu
— ARIKA🇮🇳🚩 (@nidhisj2001) September 27, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இரண்டு குழுவினர் ஒரு சாலையோர உணவகத்தின் முன்பு சண்டையிட்டுக்கொள்கின்றனர். கடைக்காரர் பகோடாவுக்கு புளி சட்டினிக்கு பதிலாக புதினா சட்ர்டினி கொடுத்ததால் இந்த மோதல் வெடித்துள்ளது. ஒரு குழுவினர் கடைக்காரரை தாக்க தொடங்கி நிலையில், கடைக்காரருக்கு ஆதரவாக வேறொரு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர். இவ்வாறு இரண்டு குழுக்களாக பிரிந்து தங்களது கைகளில் கிடைக்கும் கட்டை, கல் என அனைத்தையும் வைத்து அவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : Viral Video : இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்ற கார்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
இந்த சம்பவத்தின் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாளி வருகிறது.