Viral Video : டெலிவரி ஊழியரை 5 ஸ்டார் உணவகத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
Man Treats Delivery Worker to 5-Star Hotel | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இன்ஃப்ளூயன்சர் ஒருவர் டெலிவரி ஊழியர் ஒருவருக்கு 5 ஸ்டார் உணவகத்தில் ஜூஸ் வாங்கி கொடுப்பது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உலகம் வஞ்சகம் மிகுந்ததாக மாறி வருகிறது, மனிதர்களுக்கு மத்தியில் போட்டி, பொறாமை அதிகரித்து வரும் நிலையில் மனிதாபிமானம் உள்ளிட்ட குணங்கள் இல்லாமல் சூழல் உருவாகியுள்ளது. சக மனிதரை, மனிதராக கூட மதிக்க முடியாதவர்களாக மனிதர்கள் மாறி வருகின்றனர். ஒரு மனிதர், மற்றொருவரை மிக இழிவாக நடத்தும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். ஆனால், இளைஞர் ஒருவர் டெலிவரி ஊழியர் ஒருவரை பெரிய உணவகத்திற்குன் அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெலிவரி ஊழியரை 5 ஸ்டார் உணவகத்திற்கு அழைத்துச் சென்ற நபர்
பொதுமக்களுக்கு மிக விரைவாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய ஸ்விக்கி, சொமேட்டோ, இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஏராளாமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான மரியாதை இந்த சமூதாயத்தில் கிடைப்பதில்லை. பலரும் டெலிவரி ஊழியர்களை மிகவும் ஏளனமாக நடத்துகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும் நிலையில், இன்ஃப்ளூயன்சர் ஒருவர் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி ஊழியரை 5 ஸ்டார் உணவகத்திற்கு சாப்பிட அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : AI மூலம் முடி வெட்டும் தொழிலுக்கும் ஆபத்து?.. இணையத்தில் வைரலாகும் வீடியொ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் டெலிவரி ஊழியர் ஒருவர் சாலையோரத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார். அவரிடம் இளைஞர் ஒருவர் சென்று 5 ஸ்டார் உணவகத்தில் சாப்பிடாமா என கேட்கிறார். அதற்கு அந்த நபர், சம்மதம் தெரிவிக்கவே இருவரும் அந்த உணவகத்திற்கு சென்று சாப்பிடுகின்றனர். அப்போது இருவரும் தங்களது வாழ்க்கை குறித்து பகிர்ந்துக்கொள்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.