IND vs WI: கோலி, கில் சதம்.. 296 ரன்களை அசால்ட்டாக விரட்டி வெற்றி கண்ட இந்திய அணி!
IND vs WI 1st ODI Highlights: முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி சதத்தின் உதவியால் 42 ஓவர்களில் வெற்றியை ருசித்தது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் (IND vs WI) இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி (Virat Kohli) சதத்தின் உதவியால் 42 ஓவர்களில் வெற்றியை ருசித்தது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
ALSO READ: எங்களது ஓய்வு பிளான் இதுதான்.. கோலியுடான ரிட்டயர்மெண்ட் திட்டம் குறித்து ரோஹித் ஓபன்!
ஜஸ்டின் கிரீவ்ஸின் முதல் ஒருநாள் சதம்
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றனர். ஜான் கேம்ப்பெல் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேம்ப்பெல் 60 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் எடுத்தார். கிரீவ்ஸ் 108 பந்துகளில் 12 பவுண்டரிகள் உதவியுடன் 101 ரன்கள் எடுத்தார், இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். இந்த 2 தொடக்க ஆட்டக்காரர்களும் குல்தீப் யாதவால் ஆட்டமிழந்தனர்.




நல்ல தொடக்கம் பெற்ற கேசி கார்டி (13) மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் (12) ஆகியோர் இன்னிங்ஸைத் தக்கவைக்கத் தவறி, விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியாக, அமீர் ஜங்கூ ஒரு முக்கியமான அரைசதம் அடித்து அணியை 300 ரன்களுக்கு அருகில் கொண்டு சென்றார். அமீர் ஜங்கூ 43 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: 55வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்கள்.. இமயம் தொட்ட விராட் கோலி!
குல்தீப் யாதவ் தனது 10 ஓவர்களில் 40 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். பிரசித் கிருஷ்ணா தனது 10 ஓவர்களில் 62 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். குர்னூர் பிரார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது 10 ஓவர்களில் முறையே 60 மற்றும் 54 ரன்களை விட்டுக்கொடுத்தனர், ஆனால் இருவரும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. நிதிஷ் குமார் ரெட்டி தனது 5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்தார். நமன் திர் தனது 5 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.