‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி’ – முதல்வர் விஜய்யை அட்டாக் செய்த உதயநிதி ஸ்டாலின்..
Udhayanidhi Attack On CM Vijay: எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ‘ஓம் சக்தி பராசக்தி’ என நம்மை விமர்சித்துக் கொண்டிருந்தார். இப்போது நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். நாம் ஒன்று சொல்வோமா? ‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி’” என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
செப்டம்பர் 27, 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி’” என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
சூடு பிடிக்கும் அரசியல் களம்:
தமிழக முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் தொகுதிகளில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்து வருகின்றன.
கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் மீது விமர்சனம்
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜயை விமர்சித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு இதே நாளில் கரூரில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பிரசாரத்திற்காக 10 மணி நேரம் தாமதமாகச் சென்றதால் ஏற்பட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்” எனக் கூறினார்.
மேலும் படிக்க: மண் திருட்டு புகார்.. அரசுக்கு ரூ. 8.22 கோடி இழப்பு.. முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..
மேலும், “இந்த சம்பவத்திற்காக விஜய் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. மக்களை சந்திக்காமல் திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்றுவிட்டார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை” என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
“த.வெ.க. ஒரு ஓடுகாலி” – உதயநிதி அட்டாக்:
தொடர்ந்து பேசிய அவர், “எந்த குற்ற உணர்ச்சியும், மனசாட்சியும் இல்லாதவர்தான் கோடு காளி முதல்வர். அவரால் நிம்மதியாக தூங்க முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ‘ஓம் சக்தி பராசக்தி’ என நம்மை விமர்சித்துக் கொண்டிருந்தார். இப்போது நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். நாம் ஒன்று சொல்வோமா? ‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி’” என விமர்சித்தார்.
மேலும் படிக்க: 2021 சைக்கிளில் சென்று திமுகவுக்கு வாக்களித்தவர் தான் விஜய்.. அதிமுக பற்றி பேச என்ன தகுதி உள்ளது – எடப்பாடி பழனிசாமி தாக்கு..
மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்தும் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் முன்வைத்தார். “புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய் எம்எல்ஏக்களை தூக்கிவிட்டார். 10 நாட்களில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் த.வெ.க. பக்கம் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால் தொகுதி மக்கள் த.வெ.க. வேட்பாளர்களை விரட்டியடிக்கத் தொடங்கிவிட்டனர்” என அவர் தெரிவித்தார்.