AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Haiku: ஒட்டுமொத்த காலேஜ்க்கும் ஒரே ஒரு பையன்.. நகைச்சுவை.. காதல் கதையில் வெளியானது அகனின் ஹைக்கூ படத்தின் ட்ரெய்லர்!

Haiku Movie Trailer: தமிழ் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேசப்பட்டவர் அகன். இவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ள முதல் திரைப்படம்தான் ஹைக்கூ. இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Haiku: ஒட்டுமொத்த காலேஜ்க்கும் ஒரே ஒரு பையன்.. நகைச்சுவை.. காதல் கதையில் வெளியானது அகனின் ஹைக்கூ படத்தின் ட்ரெய்லர்!
ஹைக்கூ திரைப்பட ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Oct 2026 21:49 PM IST

கோலிவுட் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்து தற்போது படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளவர்தான் அகன் (Agan). இவர் நடிகர் ரியோ ராஜ் நடித்திருந்த ஜோ (Joe) படத்தில் அவரின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், இவரின் கதாபாத்திரம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் தற்போது படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தமிழில் இவர் ஹீரோவாக நடித்துள்ள முதல் திரைப்படம்தான் ஹைக்கூ (Haiku). இதை அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி (Yuvaraj Chinnasamy) இயக்கியுள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தி கோர்ட் Vs நோபடி படத்தின் நடிகை ஸ்ரீதேவி (Sridevi) நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படமானது அதிரடி காதல் மற்றும் பீல் குட் ரோமெண்டிக் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்.. விவரங்கள் இதோ!

அகனின் ஹைக்கூ படத்தின் ட்ரெய்லர் குறித்தும் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பதிவு:

அகனின் ஹைக்கூ படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த ஹைக்கூ படத்தில் அகன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் போன்ற நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் பெண்கள் படிக்கும் கல்லூரியில் ஒரே ஆணாக நடிகர் அகன் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ராட்சசன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? அட இது தெரியாமப்போச்சே!

இந்நிலையில் இந்த கல்லூரியில் ஒரே ஆணாக படிக்கும் அகன், நடிகை ஸ்ரீதேவியின் மீது எவ்வாறு காதல் கொள்கிறார். மேலும் வேலைக்கு சென்றவுடன் மற்றொரு பெண்ணுடன் எவ்வாறு காதல் வருகிறது என இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

ஹைக்கூ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த ஹைக்கூ படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு 2026ம் அக்டோபர் 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இப்படமும் இவருக்கு வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us