AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன்: பாய்ந்து சென்று காப்பாற்றிய இளைஞர்

Watch Video: சிறுவன் கீழே விழுவதை பார்த்த அகமது ரகாப், உடனடியாக அந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்று, சிறுவன் விழும் இடத்திற்கு நேராக கீழே நின்றார். அப்போது சிறுவன் கீழே இருந்த துணி உலர்த்தும் கம்பியில் முதலில் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் தாமதமான நிலையில், ரகாப் சரியான இடத்திற்கு சென்று சிறுவனை தனது கைகளில் தாங்கிப் பிடித்தார்.

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன்: பாய்ந்து சென்று காப்பாற்றிய இளைஞர்
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்.. காப்பாற்றிய இளைஞர்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Oct 2026 21:58 PM IST

அக்டோபர் 5, 2026: எகிப்தின் கிசா நகரில் 2-வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவனை, சரியான நேரத்தில் செயல்பட்டு இளைஞர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. கிசாவின் அர்த் எல்-லிவா பகுதியில் உள்ள கடை அருகே அகமது ரகாப் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென கூச்சல் மற்றும் அழுகை சத்தம் கேட்டது. அருகில் இருந்த கட்டிடத்தை அவர் பார்த்தபோது, 2-வது மாடி பால்கனியில் இருந்து சிறுவன் ஒருவர் கீழே விழுந்து கொண்டிருப்பதை கவனித்தார்.

பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர்:


சிறுவன் கீழே விழுவதை பார்த்த அகமது ரகாப், உடனடியாக அந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்று, சிறுவன் விழும் இடத்திற்கு நேராக கீழே நின்றார். அப்போது சிறுவன் கீழே இருந்த துணி உலர்த்தும் கம்பியில் முதலில் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் தாமதமான நிலையில், ரகாப் சரியான இடத்திற்கு சென்று சிறுவனை தனது கைகளில் தாங்கிப் பிடித்தார்.

இதனால் சிறுவன் தரையில் விழாமல் தடுக்கப்பட்டார். மீட்பு நடந்ததும் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சிறுவனைச் சுற்றி திரண்டனர்.

குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்:

சிறுவனை காப்பாற்றிய அகமது ரகாபின் செயல் எகிப்து சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால், தனது உயிரைப் பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை என்றும், ஆபத்தில் இருந்த குழந்தையை பார்த்ததும் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பிறகுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாகவும், அந்த வேகத்தில் எப்படி சென்று சிறுவனை பிடித்தேன் என்பது தனக்கே தெரியவில்லை என்றும் ரகாப் கூறியுள்ளார்.

மேலும், பால்கனி மற்றும் ஜன்னல் அருகே குழந்தைகள் ஏறுவதற்கு வசதியாக நாற்காலி உள்ளிட்ட பொருட்களை வைக்காமல், பெற்றோர் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Follow Us