Mysskin: பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் வருமா என தெரியவில்லை.. மிஷ்கின் பேச்சு!
Mysskin Doubts Pisasu 2 & Train Movie Release: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மிஷ்கின். இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 2 படங்களானது வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த 2 படங்கள் ரிலீஸில் சந்தேகம் என இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார். இது குறித்து தகவல்கள் இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மிஷ்கின் (Mysskin). இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படங்களும் வெளியாகவில்லை. இவரின் இயக்கத்தில் பிசாசு 2 (Pisaasu 2) மற்றும் ட்ரெயின் (Train) போன்ற இரு திரைப்படங்கள் உருவாகியுள்ள நிலையில், ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இயக்குநராக படங்களை இயங்கிவந்த இவர், நடிகர்கவும் படங்களில் பணியாற்றிவருகிறார். தற்போது அறிமுக இயக்குநர் இயக்கத்தில் சத்யவான் சாவித்ரி (Satyavan Savithri) என்ற படத்தில், கீர்த்தி சுரேஷுடன் (Keerthy Suresh) இவர் நடித்துவருகிறார். மேலும் இவரின் நடிப்போல் இறுதியாக வெளியான திரைப்படம் ஐஆம் கேம் (Im Game).
இந்த படத்திற்கு பின் தொடர்ந்து புதிய படங்களிலும் பணியாற்றிவருகிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படங்களின் ரிலீஸ் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: 8 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எமோஷ்னல் பதிவு!
பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் குறித்து மிஷ்கின் பேசிய விஷயம்:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், “பிசாசு 2 இன்னும் வெளியாகாததால், ட்ரெயின் பட வெளியீட்டைப் பற்றிய எண்ணமும் என் மனதில் நின்றுவிட்டது. சமீபத்தில், எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு பெரிய யானை, இறந்துபோன தன் இரண்டு குட்டிகளைத் தூக்கிக்கொண்டு வந்து என் கிணற்றில் போட்டது. பிறகு, என் கனவில், நான் வீட்டிற்குள் சென்று, நிறைய பழங்களையும் தண்ணீரையும் கொண்டுவந்து, அந்த யானையின் முன் சமர்ப்பித்தேன். அதோடு கனவு முடிந்தது.
இதையும் படிங்க: உறுதியானது சூர்யா – எச்.வினோத் கூட்டணி? கவனத்தை ஈர்க்கும் தகவல்
தன்பிறகு, அந்தக் கனவின் அர்த்தம் என்னவென்று நான் ChatGPT-யிடம் கேட்டேன். இறந்துபோன அந்த இரண்டு குட்டிகளும், இறந்துபோய் என் மனதில் இருந்த இரண்டு நெருங்கிய உறவினர்களைக் குறிக்கலாம் என்று அது கூறியது. அப்போது, அந்த இரண்டு உறவினர்களும் உண்மையில் என்னுடைய இரண்டு படங்களான ட்ரெயின் மற்றும் பிசாசு 2-ஐக் குறிக்கலாம் என்று நான் நினைத்தேன் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
ட்ரெயின் மற்றும் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் குறித்து மிஷ்கின் பேசிய வீடியோ பதிவு:
#Mysskin Recent
– #Pisasu2 has not been released yet, so the thought of the #Train release also stopped in my mind. Recently, I had a dream where a big elephant carried its two dead babies and put them into my well. Then, in my dream, I went into the house, brought many fruits and water, and offered them in front of the elephant. Then the dream ended.
– After that, I asked ChatGPT what the dream meant. It said that the two dead babies could represent two close relatives who had died and were on my mind. Then I thought that those two relatives could actually represent my two films, Train and Pisasu 2. https://t.co/tDmWFL15ee
— Movie Tamil (@_MovieTamil) October 4, 2026
இயக்குநர் மிஷ்கின் தற்போது சினிமாவில் நடிகராகவும் தொடர்ந்து நடிக்கும் பணிகளை செய்துள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் படம் 2026ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அதில் சந்தேகம் இருப்பதுபோல மிஷ்கின் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.