தீபாவளிக்கு விலை உயரும் பட்ஜெட் போன்கள் – ரூ.20,000க்குள் வாங்கக்கூடிய 5 சிறந்த 5ஜி போன்கள்
Budget 5G Phones Get Costlier : தீபாவளையை முன்னிட்டு பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கத் தேடுபவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ரூ. 10,000 என்ற பட்ஜெட் விலையில் கிடைத்து வந்த 5ஜி போன்கள் விலை உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தீபாவளிக்கு (Diwali) இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில் தீபாவளையை முன்னிட்டு பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கத் தேடுபவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ரூ. 10,000 என்ற பட்ஜெட் விலையில் கிடைத்து வந்த 5ஜி போன்கள் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன. அமேசானில் தற்போது ரூ.15,000க்குள், 4 ஸ்டார்களுக்கு மேல் மதிப்பீடு பெற்ற 5ஜி போன்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன. இதன் பின்னால் உள்ள அதிர்ச்சி காரணம் குறித்து பார்க்கலாம்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள மெமரி சிப் தட்டுப்பாடு தான் பட்ஜெட் விலை போன்கள் குறைந்ததற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு டேட்டா மையங்கள் பெருமளவில் மெமரி சிப்களை வாங்கிக் குவிப்பதால், சிப் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அந்தப் பக்கம் திருப்பியுள்ளன. இதனால், ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் சிப்களின் உற்பத்தி குறைந்துள்ளது.
இதையும் படிக்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் அவதார் உருவாக்குவது எப்படி?.. Step By Step Guide இதோ!




பட்ஜெட் போன்களுக்கே அதிக பாதிப்பு
இந்த விலை உயர்வு பட்ஜெட் போன்களையே அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக ரூ.15,000-க்குக் குறைவான போன் ஒன்றைத் தயாரிக்க ஆகும் மொத்தச் செலவில், கடந்த ஆண்டு 20 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த மெமரி சிப்பின் பங்கு, தற்போது 45 சதவிகிதத்தை தாண்டிவிட்டதாக கவுன்டர்பாயின்ட் தெரிவிக்கிறது. இதன் விளைவாக, 2026 ஏப்ரல் – ஜூன் காலாண்டில் பட்ஜெட் போன்களின் விநியோகம் கடந்த ஆண்டைவிட 45 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதன் படி ரூ.10,000 விலையில் உள்ள 5ஜி போன்கள் தீபாவளிக்குள் ரூ.20,000க்கு மேல் விலை உயரக்கூடும் சில நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
அமேசானில் ரூ. 20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்
இதனையடுத்து தற்போது பட்ஜெட் விலையில் புதிய போன் வாங்க விரும்புவோருக்கு ரூ.20,000 என்பது தான் குறைந்தபட்ச விலையாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், 4 ஸ்டார்களுக்கு மேல் மதிப்பீடு பெற்ற ரூ.20,000க்கும் குறைவாக 5 சிறந்த 5ஜி போன்கள் குறித்து பார்க்கலாம். .
1. லாவா போல்ட் N4 ப்ரோ 5ஜி
இந்த லிஸ்டில் ரூ.15,000க்குள் கிடைக்கும் ஒரே போன் இதுதான். இந்த விலையில் பெரும்பாலான மாடல்களைவிட அதிகமாக 6ஜிபி ரேமும் 128ஜிபி ஸ்டோரேஜும் கிடைக்கின்றன. இதன் விலை ரூ.14,999 என்ற நிலையில் விற்பனையாகிறது. இதன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் இதன் பெரிய பலம். ஆண்ட்ராய்டு 17 அப்டேட்டும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
2. ரியல்மி P4 லைட்
இந்த லிஸ்டில் 7,000mAh பெரிய பேட்டரியுடன் கிடைக்கும் போன் இது தான். இது ரூ.15,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. புகைப்படங்களைவிட பேட்டரியும் பெரிய ஸ்கிரீனும் முக்கியம் என நினைப்பவர்களுக்கு ஏற்றது.
3. iQOO Z10 லைட் 5ஜி
500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து 4.2 நட்சத்திர மதிப்பீடு பெற்று, பட்ஜெட் போன்கள் லிஸ்டில் அதிகம் விரும்பப்படும் போனாக இது உள்ளது. அதிகபட்ச சில்லறை விலையிலிருந்து 39 சதவிகித தள்ளுபடியில் கிடைக்கிறது. தூசி மற்றும் நீர்த்துளிகளிலிருந்து பாதுகாக்கும் IP64 தரச்சான்றும், ராணுவத் தர அதிர்வு எதிர்ப்புத் திறனும் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. இந்த போன் ரூ.16.99 என்ற விலையில் விற்பனையாகிறது.
இதையும் படிக்க : வீட்டுக்கு சிறந்த ஏசியை தேர்வு செய்வது எப்படி?.. இவை தான் முக்கியம்!
4. ரெட்மி 15C 5ஜி பிரைம் எடிஷன் (6GB + 128GB):
அமேசானில் 44 சதவிகித தள்ளுபடியுடன் இந்த போன் விற்பனையாகிறது. பட்ஜெட் போன் லிஸ்டில் வேகமான சார்ஜிங் வசதி இதில் உள்ளது வீடியோ பார்ப்பது உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுக்கு இது ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர். தற்போது ரூ.17,999 என்ற விலையில் விற்பனையாகிறது.
5. விவோ T4 லைட் 5ஜி (4GB + 128GB): ரூ.18,949
அதிக அளவில் புகைப்படங்கள், வீடியோக்களைச் சேமிப்பவர்களுக்கு இது நல்ல தேர்வு. 128GB ஸ்டோரேஜுடன், மெமரி கார்டு மூலம் 2TB வரை விரிவாக்கும் வசதியும் உள்ளது. 570க்கும் மேற்பட்ட மதிப்பீடுகளுடன் 4.1 நட்சத்திரங்கள் பெற்றுள்ள இது, பரவலான சர்வீஸ் வசதி கொண்ட நம்பகமான பிராண்டின் தயாரிப்பு. இந்த போன் ரூ.18,949 என்ற விலையில் விற்பனையாகிறது.