AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: ஹோப்-சாம்சனின் அபார ஆட்டம்! ஒரே போட்டியில் குவிந்த 10 சாதனைகள்!

IND vs WI 4th T20 Historic Records: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 4வது டி20 போட்டியில் ரன் மழை பொழிந்து பல சாதனைகள் படைக்கப்பட்டன. ஷாய் ஹோப் சதம் விளாசி டி20யில் 2000 ரன்களைக் கடந்தார். சஞ்சு சாம்சன் தனது 100வது சிக்ஸரை எட்டி உலக சாதனையை சமன் செய்தார். மேலும், அதிவேக அரைசதம் மற்றும் இந்திய அணி 2000 சிக்ஸர்கள் அடித்த சாதனைகளையும் இப்போட்டி கண்டது.

IND vs WI: ஹோப்-சாம்சனின் அபார ஆட்டம்! ஒரே போட்டியில் குவிந்த 10 சாதனைகள்!
ஷாய் ஹோப் - சஞ்சு சாம்சன்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Oct 2026 16:35 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான டி20 தொடர் முழுவதும் ரன் மழை பொழிந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன. முதல் டி20 போட்டியைத் தவிர, மீதமுள்ள அனைத்து போட்டிகளில் இரு அணிகளும் 200 ரன்களைக் கடந்துள்ளன. நேற்று அதாவது 2026 அக்டோபர் 14ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியிலும் ரன் மழை பொழிந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷாய் ஹோப் சதத்தையும், ரதர்ஃபோர்ட் 26 பந்துகளில் 49 ரன்கள் என்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இலக்கை துரத்தியபோது இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) தனது அதிரடியாக பேட்டிங் மூலம் உலக சாதனையை சமன் செய்தார். இந்தநிலையில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4வது டி20 போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பவுலிங் சொதப்பல்.. அவங்கதான் காரணம் – தோல்விக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் கொந்தளிப்பு

4வது டி20 போட்டியின் சாதனைகள் விவரம்:

  • ஷாய் ஹோப் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தை அடித்தார். இதன் மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் 3 சதங்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை ஹோப் பெற்றார்.
  • இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஷாய் ஹோப் தனது இரண்டாவது சதத்தை அடித்ததன் மூலம், ஒரே டி20 சர்வதேச தொடரில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • டி20 சர்வதேசப் போட்டிகளில் ஷாய் ஹோப் அடித்த மூன்று சதங்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை உள்ளது. இந்த மூன்று சதங்களிலும் ஹோப் ஆட்டமிழக்காமல் தலா 102 ரன்கள் எடுத்திருந்தார்.
  • டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்ததன் மூலம், இந்தச் சாதனையை எட்டிய நான்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை ஷாய் ஹோப் பெற்றார்.
  • டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிறகு 2000 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, இந்தியா தற்போது 2010 சிக்ஸர்களை அடித்துள்ளது.
  • நான்காவது டி20 போட்டியில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் சஞ்சு சாம்சன், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது சிக்ஸரை நிறைவுசெய்து, இந்த மைல்கல்லை எட்டிய 6வது இந்திய வீரர் ஆனார்.
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20யில் இந்திய அணி வெறும் மூன்று ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. டி20 சர்வதேச கிரிக்கெட்டின் அதிவேக அரைசதம் இந்த இன்னிங்ஸின் போது பதிவு செய்யப்பட்டது.
  • சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தை வெறும் 3.4 ஓவர்களில், அதாவது 22 பந்துகளில் நிறைவு செய்தார்.

ALSO READ: 223 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி.. தொடரை தக்க வைத்த வெஸ்ட் இண்டீஸ்!

  • இந்தியாவில் நடைபெற்ற, இந்தியாவுக்கு எதிரான தனது முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிகரமாக தனது இலக்கை பாதுகாத்தது. அதாவது, 247 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள், இந்திய அணியை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.
  • டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிரான ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்தியாவிற்கு எதிராக இவ்வாறு செய்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் என்ற பெருமையை கீமோ பால் பெற்றார்.

Follow Us