AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: முதலில் பந்துவீசும் இந்திய அணி.. வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவனில் மாற்றமா?

IND vs WI 4th T20: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த தொடரின் முதல் மற்றும் 3வது போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.

IND vs WI: முதலில் பந்துவீசும் இந்திய அணி.. வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவனில் மாற்றமா?
இந்திய அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 14 Oct 2026 19:11 PM IST

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையிலான 4வது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியின் (Indian Cricket Team) ஆடும் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த தொடரின் முதல் மற்றும் 3வது போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்கள் என்ற சாதனை இலக்கை விரட்டிப் பிடித்தது. தற்போது ஹைதராபாத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை தக்கவைக்க வேண்டுமெனில், இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். அதேநேரத்தில், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றியுடன் முன்னிலையைப் பெற்று தொடரைக் கைப்பற்ற முனையும்.

ALSO READ: கோலியால் தனியாக உலகக் கோப்பையை வெல்ல முடியாது: முன்னாள் வீரர் கொடுத்த எச்சரிக்கை

4வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்:

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ்.

4வது டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன்:

ஷாய் ஹோப் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜூவல் ஆண்ட்ரூ, ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், கீமோ பால், ஷமர் ஸ்பிரிங்கர், கூடகேஷ் மோதி மற்றும் ஷமர் ஜோசப்.

டாஸ் வென்ற பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது, “முதல் இன்னிங்ஸில் பிட்ச் எப்படி இருக்கும் என்பது பற்றி எங்களுக்கு ஒரு யோசனை இருக்கிறது. எனவே, அதன் அடிப்படையில், நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். நாங்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடியுள்ளோம். ஆனால் வெளிப்படையாக, தற்போதைய சூழ்நிலைகளையும் பனி இல்லாததையும் கருத்தில் கொண்டால், ஆட்டம் சற்று போட்டியாக இருக்கக்கூடும். மேலும், பிட்ச்சில் பவுன்ஸும் இருக்கலாம். இது மிகவும் கடினமானது. இது எங்களுக்கு ஒரு தீர்க்கமான போட்டியாக இருக்கும், மேலும் நாங்கள் சிறிதும் அலட்சியம் காட்டாத மனநிலையுடன் விளையாட வேண்டும்.

ALSO READ: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 4வது டி20யில் மழையா..? வானிலை நிலவரம் இதோ!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒன்பதாவது இடம் வரை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே, இவை அனைத்தையும் மனதில் கொண்டு, நாம் ஒரு வலுவான மனநிலையுடன் விளையாடி, ஒவ்வொரு செஷனையும் வெல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கடந்த போட்டியில் நாங்கள் காட்டிய பொறுமை மிகச் சிறப்பாக இருந்தது, இன்றும் அதேபோல் செயல்பட விரும்புகிறோம். நாங்கள் அதே அணியுடன்தான் களமிறங்குகிறோம்.”என்றார்.

Follow Us