AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரோகித் சர்மா, விராட் கோலி வரிசையில் திலக் வர்மா – புதிய சாதனை

Tilak Varma Fielding Record : மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஃபீல்டிங்கில் அசத்திய இந்திய வீரர் திலக் வர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் இடம்படித்துள்ளார்.

ரோகித் சர்மா, விராட் கோலி வரிசையில் திலக் வர்மா –  புதிய சாதனை
திலக் வர்மா
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Oct 2026 16:13 PM IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஃபீல்டிங்கில் அசத்திய இந்திய வீரர் திலக் வர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள சிறப்புப் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த போட்டியில் 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக கடினமான நேரத்தில், குவென்டின் சாம்ப்சன், கீமோ பால் ஆகிய இருவரின் முக்கியமான கேட்சுகளை திலக் வர்மா பிடித்தார். இந்த விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றின. குறிப்பா, இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் 50 கேட்சுகளைப் பிடித்த 5வது வீரர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார்.

இந்தியாவுக்காக அதிக கேட்சுகள் பிடித்தவர்கள்

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஃபீல்டராக (விக்கெட் கீப்பர் அல்லாமல்) அதிக கேட்சுகளைப் பிடித்தவர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா 65 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹார்திக் பாண்டியா 64 கேட்சுகளுடன் இரண்டாம் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 58 கேட்சுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 54 கேட்சுகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறார். தற்போது 50 கேட்சுகளுடன் திலக் வர்மா ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க : IND vs WI: வெளியேறும் ஷிவம் துபே.. நிதிஷுக்கு வாய்ப்பு..? இந்திய பிளேயிங் லெவனில் மாற்றமா?

திலக் வர்மா தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் வெறும் 68 போட்டிகளிலேயே 50 கேட்சுகளை எட்டியுள்ளார். உலக அளவில் இதுவரை 34 வீரர்கள் மட்டுமே டி20 போட்டிகளில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்சுகளை ஃபீல்டராகப் பிடித்துள்ளனர். இவர்களில், ஒரு இன்னிங்ஸுக்குச் சராசரியாக அதிக கேட்சுகள் பிடித்தவர்களின் பட்டியலில் திலக் வர்மா இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது சராசரி 0.757. ஐக்கிய அரபு அமீரக வீரர் முகமது வசீம் மட்டுமே 99 இன்னிங்ஸ்களில் 76 கேட்சுகளுடன் 0.767 என்ற சராசரியுடன் அவரைவிட முன்னிலையில் உள்ளார்

ஃபீல்டிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் திலக் நல்ல ஃபார்மில் காணப்பட்டார். 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த அவரது விறுவிறுப்பான ஆட்டம், இந்திய அணி 223 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக 69 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தார். அவருக்குப் பின் இஷான் கிஷன் 37, திலக் வர்மா 28, நிதிஷ் ரெட்டி 21 ரன்கள் எடுத்துப் பங்களித்தனர். இதனால் இந்தியா 223 ரன்கள் குவித்தது.

இதையும் படிக்க : NZ ODI Squad vs India: திரும்பிய ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன்.. இந்தியாவிற்கு எதிரான NZ ஒருநாள் அணி அறிவிப்பு!

224 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் கடுமையாகப் போராடியது. ஆனால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் இறுதிவரை கட்டுப்பாட்டுடன் பந்துவீசி, அந்த அணியை 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களில் கட்டுப்படுத்தினர். இந்தியப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாகச் செயல்பட்டார். 4 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், மேற்கிந்தியத் தீவுகள் மீண்டும் ஒரு இலக்கைத் துரத்தி வெற்றிபெறுவதைத் தடுத்தார். இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

Follow Us