AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20.. ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை!

India vs West Indies 3rd T20: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20 போட்டி அக்டோபர் 11 அன்று இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், இந்தூர் மைதானத்தில் இந்தியா 4 டி20 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இங்கு அதிக ரன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஹோல்கர் மைதானத்தின் இந்திய அணி சாதனைகள், அதிகபட்ச ஸ்கோர்கள் மற்றும் போட்டி நேர விவரங்களை இங்கே காணலாம்.

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20.. ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Oct 2026 23:29 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது போட்டி இன்று அதாவது 2026 அக்டோபர் 11ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் (Holker Stadium) நடைபெற உள்ளது. தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இரண்டாவது போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து 500 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தன. எனவே, இந்தூரிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் சரமாரியாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தூரில் இதுவரை இந்திய அணியின் சாதனையை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பந்துவீச்சில் சொதப்பல்.. இந்திய அணியில் மாற்றமா..? பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இந்தூரில் இந்திய அணி இதுவரை:

ஹோல்கர் ஸ்டேடியத்தில் இதுவரை 4 டி20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 4 போட்டிகளிலும் இந்தியா பங்கேற்றுள்ளது. இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த மைதானத்தில் முதல் முறையாக டி20 சர்வதேசப் போட்டியில் விளையாட உள்ளது.

எந்த அணியிடம் இந்திய அணி தோற்றது..?

இந்த ஸ்டெடியத்தில் இந்தியா, இலங்கையை இரண்டு முறையும், ஆப்கானிஸ்தானை ஒரு முறையும் தோற்கடித்துள்ளது. இருப்பினும், 2022-ல் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது. இங்கு முதலில் பேட் செய்த அணி 2 முறையும், இலக்கை விரட்டிய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. டாஸ் மற்றும் போட்டியின் சூழல் ஆகிய இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஹோல்கர் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் 260

ஹோல்கர் மைதானத்தில் டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 260 ரன்கள் ஆகும். இதை, இந்திய அணி 2017-ல் இலங்கைக்கு எதிராக எடுத்தனர். தென்னாப்பிரிக்காவும் இந்த மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 227 ரன்கள் எடுத்தது. 2024-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 173 ரன்கள் என்ற இலக்கை இந்தியா வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது. இந்தப் புள்ளிவிவரங்கள் இந்த மைதானத்தின் ரன் குவிக்கும் திறனைக் காட்டுகின்றன.

ALSO READ: ஹோல்கர் ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமா? இந்திய அணி வெற்றியை ருசிக்கமா?

போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்..?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, டாஸ் மாலை 6:30 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், நேரலை ஒளிபரப்பு ஜியோ ஹாட்ஸ்டாரிலும் காணலாம்.

Follow Us