AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: வெளியேறும் ஷிவம் துபே.. நிதிஷுக்கு வாய்ப்பு..? இந்திய பிளேயிங் லெவனில் மாற்றமா?

India vs West Indies 3rd T20: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20 இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் தோற்ற இந்திய அணி, பந்துவீச்சு மற்றும் ஆல்-ரவுண்டர் பிரிவில் முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளது. அக்சர் படேல், மயங்க் யாதவுக்கு பதிலாக ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் களமிறங்கலாம். ஷிவம் துபேவுக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்புண்டு. ஹோல்கர் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது.

IND vs WI: வெளியேறும் ஷிவம் துபே.. நிதிஷுக்கு வாய்ப்பு..? இந்திய பிளேயிங் லெவனில் மாற்றமா?
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Oct 2026 18:07 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே (IND vs WI) நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான திருப்பத்தை எட்டியுள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், 250 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கைக் கடந்து வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்தத் தோல்வியின் மூலம், தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தற்போது அனைவரின் கவனம் இன்று அதாவது 2026 அக்டோபர் 11ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் 3வது டி20 போட்டியின் மீது உள்ளது. இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) நிர்வாகம் தனது ஆடும் லெவனில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யவிருக்கிறது.

ALSO READ: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 போட்டி எப்போது, ​​எங்கே நடைபெறும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்திய அணிக்கு பேட்டிங் ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை. எனவே, 3வது போட்டியில் தொடக்க ஜோடியில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. இதன் காரணமாக, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடும் லெவனில் இடம்பிடிக்க இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துமா இந்திய அணி..?

இந்திய அணியின் முக்கியப் பிரச்சினை பந்துவீச்சில்தான் இருந்து வருகிறது. இரண்டாவது போட்டியில், இந்தியப் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் அதிக ரன்களைக் கொடுத்தார். அக்சர் தனது 3.3 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 63 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த மோசமான ஆட்டத்தின் காரணமாக, 3வது டி20 போட்டியில் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக இளம் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இது தவிர, வேகப்பந்து வீச்சிலும் மாற்றம் இருக்கும். இரண்டாவது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், வெறும் 3 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவரது அதிகப்படியான ரன்களைக் கருத்தில் கொண்டு, இந்தூரில் நடைபெறவுள்ள போட்டியில் அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிவம் துபே மீண்டும் களமிறங்குவாரா..?

ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேயின் ஆட்டம் கடந்த சில நாட்களாக மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஷிவம் துபே பேட்டிங்கில் மந்தமாக இருப்பதுடன், பந்துவீச்சிலும் சிறப்பாக எதையும் செய்யவில்லை. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அவருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். நிதிஷ் குமார் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலம் அணிக்கு ஒரு முக்கியப் பங்களிப்பை வழங்க முடியும்.

பிட்ச் எப்படி..?

இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தின் பிட்ச் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சொர்க்கமாகவே கருதப்பட்டு வருகிறது. இங்குள்ள பவுண்டரிகள் சிறியதாக இருப்பதால், பெரிய ஸ்கோர்கள் அடிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. எனவே, இந்திய அணி தனது பந்துவீச்சுத் தாக்குதலை மேலும் வலுவானதாகவும் சமச்சீரானதாகவும் மாற்றிக்கொள்வது முக்கியம்.

இந்தத் தொடரில் முன்னிலை பெற, இரு அணிகளும் இந்த 3வது போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இந்திய கேப்டன் ‌ஷ்ரேயாஸ் ஐயர், ஆடும் லெவனைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம்.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20.. ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை!

3வது டி20 போட்டிக்கான இந்தியாவின் உத்தேச ஆடும் 11 பேர் கொண்ட அணி:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, திலக் வர்மா, நமன் திர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், பிரின்ஸ் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

Follow Us