IND vs WI: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 போட்டி எப்போது, எங்கே நடைபெறும்?
IND vs WI 3rd T20: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20 போட்டி அக்டோபர் 11 அன்று இந்தூரில் நடைபெறுகிறது. 1-1 என தொடர் சமன் ஆன நிலையில், இது முக்கியமான போட்டியாகும். ஹோல்கர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால், சிக்ஸர்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் யார் முன்னிலை பெறுவார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான திருப்பத்தை எட்டியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா (Indian Cricket Team) வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 250 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்து தொடரை 1-1 என சமன் செய்தது. இப்போது, மூன்றாவது டி20 போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான மோதல் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி எப்போது, எங்கு நடைபெறும் என்பதற்கான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: ஹோல்கர் ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமா? இந்திய அணி வெற்றியை ருசிக்கமா?
3வது டி20 எப்போது நடைபெறுகிறது..?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று அதாவது 2026 அக்டோபர் 11ம் தேதி நடைபெறும். இந்தப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவாக மீண்டு வந்தது. இதன் விளைவாக, தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.




5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னேறுவதற்காக, இரு அணிகளும் இந்தூரில் வெற்றியைப் பதிவு செய்ய முனையும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனவும், மாலை 6:30 மணிக்கு டாஸ் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் எப்படி..?
இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்குச் சாதகமானதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள ஆடுகளத்திலும் எல்லைகளிலும் ஏராளமான பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடிக்கப்படலாம், இருப்பினும் போட்டி நாளன்று நிலவும் சூழல்களும் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்திய அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், நமன் தீர்
ALSO READ: பந்துவீச்சில் சொதப்பல்.. இந்திய அணியில் மாற்றமா..? பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷாய் ஹோப் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜூவல் ஆண்ட்ரூ (விக்கெட் கீப்பர்), ஆமிர் ஜங்கு (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரான் ஹெட்மயர், அகில் ஹுசைன், ஷமர் ஜோசப், கூடகேஷ் மோதி, கீமோ பால், கமில் பூரன், ரோவ்மன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, குவென்டின் சாம்சன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்