No என ரிப்ளை செய்தால் பணம் போயிடும்.. வாட்ஸ்அப்பில் உருவெடுத்துள்ள புதிய மோசடி!
WhatsApp No Scam | வாட்ஸ்அப்பில் பல விதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், No என ரிப்ளை செய்தால் பணம் எடுக்கப்படும் புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. அது குறித்தும், அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.
உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு மிக முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இந்த வாட்ஸ்அப் செயலியை பலரும் தங்களது தனிப்பட்ட தேவைகள், பணி மற்றும் தொழில் சார்ந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பலராலும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டாலும் இதில் சில பாதுகாப்பு குறைப்பாடுகளும் உள்ளது. அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில் புதிய வகை மோசடி ஒன்று உருவெடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன மோசடி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் உருவெடுத்துள்ள புதிய மோசடி
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் விசி சஜ்ஜனார் வாட்ஸ்அப்பில் அரங்கேறிவரும் புதிய வகை மோசடி ஒன்று குறித்து கூறியுள்ளார். அதாவது, வாட்ஸ்அப் செயலியில் வரும் குறுஞ்செய்திக்கு No என ரிப்ளை செய்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் அரங்கேறும் அந்த புதிய வகை மோசடி குறித்து வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : அமேசான் சேல் – ரூ.20,000க்குள் 6 சிறந்த ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?




No என ரிப்ளை செய்தால் பணம் எடுக்கப்படுமா?
அதாவது பயனர்களை பதற்றமடைய செய்து, அதற்கு அவர்களை பதில் அளிக்க வைத்து அதன் மூலம் பணத்தை திருவடுவதுதான் இந்த புதிய மோசடியாக உள்ளது. அதாவது, பயனர்களின் வாட்ஸ்அப்புக்கு உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது நீங்கள் இல்லை என்றால் No என ரிப்ளை செய்யுங்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மீண்டும் அறிமுகமாகும் ஆர்குட் செயலி.. நிறுவனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அதனை கண்டு பயனர்கள் உடனடியாக No என ரிப்ளை செய்யும் பட்சத்தில் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு தான் இந்த புதிய மோசடி அரங்கேறி வருகிறது. எனவே, பயனர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், இந்த மோசடியை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.