AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவையில் தடுப்பூசி செலுத்திய 10 மாதக் குழந்தை உயிரிழப்பு! மருத்துவர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மருத்துவச் சிகிச்சையில் தவறு நடந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், தடுப்பூசி அல்லது சிகிச்சையே உயிரிழப்புக்குக் காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

கோவையில் தடுப்பூசி செலுத்திய 10 மாதக் குழந்தை உயிரிழப்பு! மருத்துவர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
உயிரிழந்த 10 மாத குழந்தை
Sekaran S
Sekaran S | Published: 14 Oct 2026 21:21 PM IST

அக்டோபர் 14, 2026: கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படும் 10 மாத பெண் குழந்தை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது. குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தடுப்பூசி செலுத்திய பின் குழந்தைக்கு உடல்நலக்குறைவு:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி – சரண்யா தம்பதியினர், கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 10 மாத பெண் குழந்தை கனிஷ்கா ஸ்ரீக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, கடந்த 7ஆம் தேதி வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் ‘டோரதி’ திரைப்படம்! படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய அமைச்சர் வன்னியரசு

அங்கு குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்திய செவிலியர், காய்ச்சல் ஏற்பட்டால் கொடுப்பதற்காக மாத்திரை ஒன்றையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வியாழக்கிழமை குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால், பெற்றோர் அந்த மாத்திரையைக் கொடுத்துள்ளனர். தொடர்ந்து குழந்தை சோர்வாகக் காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மயக்கமடைந்ததாகத் தெரிகிறது.

சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழப்பு:

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீண்டும் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த செவிலியர், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு கடந்த நான்கு நாட்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்துப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாகத் தெரிவித்தனர். தடுப்பூசி செலுத்திய பிறகும், மயக்கமடைந்தபோது மீண்டும் ஊசி செலுத்திய பிறகும் குழந்தையின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..

மேலும், குழந்தைக்கு மாரடைப்பு, மூளைக் காய்ச்சல், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினர். சிகிச்சை விவரங்களைக் கேட்டபோதும் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

குழந்தை உயிரிழப்பு – உரிய விசாரணை வேண்டும்:

குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மருத்துவச் சிகிச்சையில் தவறு நடந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், தடுப்பூசி அல்லது சிகிச்சையே உயிரிழப்புக்குக் காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Follow Us