உலகின் முதல் பறக்கும் கார்.. ரோட்ஸ்டர் காரை அறிமுகம் செய்த டெஸ்லா!
Worlds First Flying Car Of Tesla | டெஸ்லா நிறுவனம் தொடர்ந்து தனது அட்டகாசமான படைப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், உலகின் முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. அந்த பறக்கும் கார் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகம் நாளுக்கு நாள் அதிவிரைவான தொழில்நுட்ப வளர்ச்சி (Technology Development) அடைந்து வருகிறது. அதன் விளைவாக புதிய புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன உற்பத்தி துறையில் பல்வேறு அட்டகாசமான புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான், டெஸ்லா நிறுவனம் உலகின் முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் இந்த அசாத்திய கண்டுபிடிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரோட்ஸ்டர் காரை அறிமுகம் செய்த டெஸ்லா
உலக அளவில் மின்சார கார்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட கார்களை உலகில் முதலில் அறிமுகம் செய்யும் நிறுவனமாக டெஸ்லா இருந்து வருகிறது. இந்த நிலையில் தான், டெஸ்லா நிறுவனம் தனது புதிய படைப்பை அறிமுகம் செய்து உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, டெஸ்லா நிறுவனம் தனது டெஸ்லா ரோட்ஸ்டர் (Tesla Roadster) காரை அறிமுகம் செய்து வாகன பிரியர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க : No என ரிப்ளை செய்தால் பணம் போயிடும்.. வாட்ஸ்அப்பில் உருவெடுத்துள்ள புதிய மோசடி!
பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சி – டெஸ்லா அசத்தல்
The new Tesla Roadster literally sucks itself to the road.
Tesla says fans underneath the car pulls air out from beneath it, creating a low-pressure area that holds it against the surface with the system generating up to 2 g’s of suction, enough to hold the car upside down.
That same system presses the tires harder against the road, giving them more grip for acceleration, braking, and cornering. Unlike conventional aero, which relies on speed to build downforce, the fans can create that extra grip even at low speeds.
Bro… that means cornering beyond 2 g’s… The Roadster can adjusts its aero as its speed changes, with a variable-pitch rear wing and both high-downforce and low-drag modes.
Elon described the feeling, “You can corner like it looks like you’re breaking physics bc the car sticks to the ground so hard… This car could suck the chrome off a trailer hitch.”
And this is just the system that keeps it ON the road. Add the SpaceX thrusters, and you start to understand why the 0–60 number was never going to tell the whole story.
Tesla and SpaceX are truly pushing what we thought a car could do…
— Teslaconomics (@Teslaconomics) October 16, 2026
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், மெக்ரிகரில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் சோதனை மையத்தில் தான், இந்த பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சியை டெஸ்லா நடத்தியது. இதன் மூலம் உலகின் முதல் பறக்கும் காரை எலான் மஸ்க் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் காற்றில் பறக்கும் திறன் கொண்ட காரின் அதிரடி செயல் விளக்கத்தை டெஸ்லா செய்து காட்டியது.
இதையும் படிங்க : விழாக்கால சேலை அறிவித்த ஆப்பிள் நிறுவனம்.. என்ன என்ன சலுகைகள்!
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த கார் மணிக்கு சுமார் 370 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக உள்ளது.