AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொங்கல் வேட்டி, சேலைக்கான நெசவுக்கூலி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

Pongal Clothing Wage Increase : கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில், புதிய ரகங்களை உற்பத்தி செய்வதற்கான நெசவுக்கூலியை நிர்ணயிப்பது குறித்துப் பரிந்துரைக்க, ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைத்திருந்தது. நெசவாளர்களுக்கான கூலியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொங்கல் வேட்டி, சேலைக்கான நெசவுக்கூலி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Oct 2026 21:24 PM IST

சென்னை, அக்டோபர் 16 : பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கான கூலியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஐந்து பேர் குழுவின் பரிந்துரை

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில், புதிய ரகங்களை உற்பத்தி செய்வதற்கான நெசவுக்கூலியை நிர்ணயிப்பது குறித்துப் பரிந்துரைக்க, ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைத்திருந்தது. இந்தக் குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று, நெசவாளர்களைச் சந்தித்து கூலி உயர்வு தொடர்பான அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது கூலி உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அட இவர தெரியலை.. இவருதான் எஸ்.ஐ.யை தாக்கிய இளைஞர்.. மீண்டும் பெண் காவலரை தாக்கிய சம்பவத்தில் அதிரடி கைது!

புதிய கூலி விவரம்

  • பெடல் தறியில் சேலை ஒன்றுக்கு ரூ.125.72 என்றும் வேட்டி ஒன்றுக்கு ரூ.49.99 விலையும் நர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் விசைத்தறியை பொறுத்தவரை சேலை ஒன்றுக்கு ரூ.54.81 என்றும் வேட்டி ஒன்றுக்கு ரூ.23.34 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசாணையில் கூறப்பட்டிருப்பது என்ன?

பொங்கல் 2027 திட்டத்துக்காக உற்பத்தி செய்யப்படும் புதிய ரக பெடல் தறி, விசைத்தறி சேலைகள் மற்றும் வேட்டிகளுக்கு உயர்த்தப்பட்ட கூலியை வழங்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூலி உயர்வால் அரசுக்குக் கூடுதலாக ரூ.13.66 கோடி செலவாகும். இந்தத் தொகையை, 2026–27 நிதியாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்தே செலவிட, கைத்தறி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கூலியை உயர்த்தித் தர வேண்டும் என நெசவாளர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் தீவிரமடையும் இந்த நேரத்தில் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது நெசவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்தினை ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்த 2026-27ஆம் ஆண்டுக்கு ரூ.26.21 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இத்திட்டத்தினை பயன்படுத்தி பருத்தி உற்பத்தியினை அதிகரித்து வருமானத்தினை உயர்த்திப் பயனடைய வேண்டும் என வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் வினோத் பருத்தி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க : அனுமதிக்கான தடை தகர்ந்தது.. தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தமிழ்நாட்டில் பருத்தியானது இயல்பாக 1.27 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு சுமார் 2.50 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் நூற்பாலைகளின் தேவையை ஓரளவேனும் நிறைவு செய்யும் வகையில், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஊக்குவித்து பருத்தி சாகுபடியை விரிவுபடுத்துவதன் மூலம் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பது இன்றியமையாததாகும். இதனை கருத்தில் கொண்டு, 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய, மாநில அரசு நிதிப் பங்களிப்புடன் ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ ஐந்தாண்டுத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us